ஓசி பஸ்-ல தான போறீங்க!… விமர்சிக்கும் சக அமைச்சர்களை ஏன் கண்டிக்கவில்லை!… அண்ணாமலை பதிலடி!
Annamalai: இலவச பேருந்து வெற்றிகரமான திட்டம் என்று கூறும் அமைச்சர் தியாகராஜன், அத்திட்டத்தை, 'ஓசி' என்று விமர்சித்த சக அமைச்சர்களை ஏன் கண்டிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி,'சில அரசியல் கட்சிகள் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அளித்துள்ளன. இதனால், மெட்ரோ ரயில் பயணியரின் எண்ணிக்கை சரிந்துள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு, தமிழக அமைச்சர் தியாகராஜன் தன் சமூக வலைதளத்தில், பிரதமர் ஏன், 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்பதை, இந்த காட்சி விளக்குகிறது. பத்திரிகையாளர் தர்க்க ரீதியாக சில கேள்விகளை கேட்டிருக்க வேண்டும். ஒரு இடத்தில் மெட்ரோ ரயில் சேவை மட்டும் இருந்து, பேருந்து சேவை இல்லாமல் இருக்கிறதா.
பொது போக்குவரத்தை பொறுத்தவரை, மாணவர்கள், முதியோர், மாதாந்திர பஸ் பாஸ் என, சலுகைகள் வழங்கப்படவில்லையா. பேருந்து சேவையானது மெட்ரோ ரயிலின் சேவையை பாதிக்கிறதா என்று கேட்டிருக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு, இன்னும் நிதி வழங்க ஒப்புதல் தராமல், மத்திய அமைச்சரவை பல ஆண்டுகளாக கிடப்பில் வைத்து உள்ளது. சென்னை மெட்ரோவுக்கு பிறகு வந்த, பிற நகரங்களுக்கான திட்ட அறிவிப்புகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில், ஒருவர் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாது என்பதை பிரதமரிடம் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலவச பேருந்து வெற்றிகரமான திட்டம் என்று கூறும் அமைச்சர் தியாகராஜன், அத்திட்டத்தை, 'ஓசி' என்று விமர்சித்த சக அமைச்சர்களை ஏன் கண்டிக்கவில்லை. தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில், ஒவ்வொரு அமைச்சரும் பயனாளிகளை விமர்சிப்பது போல எங்கும் நடப்பதில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 6,000 பஸ்கள் இயக்கப்படாததால், பயணியருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக மின்சார பஸ் கொள்முதல் அறிவிப்பாகவே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Readmore: விரைவில் அமைச்சரவை மாற்றம்? யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு!! கசிந்த உளவுத்துறை ரிப்போர்ட்!!