For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”எனக்கே வாய்ப்பு தரல”..!! ”நான் எதுக்கு கட்சியில இருக்கணும்..!! முன்னாள் MLA அதிரடி விலகல்..!!

10:59 AM Mar 25, 2024 IST | Chella
”எனக்கே வாய்ப்பு தரல”     ”நான் எதுக்கு கட்சியில இருக்கணும்     முன்னாள் mla அதிரடி விலகல்
Advertisement

பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 3 தொகுதிகளில் தமாகா போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் ஜிகே வாசன் அறிவித்தார். இதையடுத்து, ஈரோடு தொகுதிக்கு விஜயகுமாரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு வேணுகோபாலும் போட்டியிடுவார்கள் ஜிகே வாசன் அறிவித்தார்.

Advertisement

எனினும், கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளர் யாரை அறிவிக்கலாம் என ஜிகே வாசன் ஆலோசித்து வந்தார். திமுக சார்பில் தற்போதைய சிட்டிங் எம்பியாக இருக்கும் கனிமொழி போட்டியிடுவதால், தூத்துக்குடி தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் அதிமுக தரப்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். இந்நிலையில், தான் தூத்துக்குடி தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், விஜயசீலன் போட்டியிடுவார் என்று ஜிகே வாசன் அறிவித்தார்.

இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏவும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த கதிர்வேல், அக்கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். தூத்துக்குடி வேட்பாளராக விஜயசீலன் போட்டியிடும் நிலையில், அதிருப்தியடைந்த கதிர்வேல், கட்சியில் இருந்தே விலகியுள்ளார். மேலும், பாஜக கூட்டணியில் சீட் வாங்கி, அதனை அதிக விலைக்கு ஜி.கே.வாசன் விற்று வருகிறார் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Read More : Crime | வெளிநாட்டில் பழக்கம்..!! கோவையில் வாடகை வீடு..!! ஏற்காட்டில் கிடந்த பெண்ணின் உடல்..!! வெளியான திடுக்கிடும் பின்னணி..!!

Advertisement