மறந்தும் கூட இந்த பொருட்களை பிறருக்கு தானமாக கொடுக்காதீர்கள்.! பெரும் பாவம் சேரும்.!
நம் அண்டை வீட்டாருடன் நல்ல உறவு பேணுவதற்காக சில பொருட்களை கொடுத்து வாங்குவது வழக்கம். மேலும் நமது வீட்டு அருகிலோ அல்லது அலுவலகத்திலோ யாரேனும் கஷ்டப்பட்டால் நம்மிடம் உள்ள பயன்படுத்திய பொருட்களை அவர்களுக்கு வழங்குவது மனிதநேயமாகும். எனினும் சில பொருட்களை பிறருக்கு தானமாக கொடுத்தால் அது கொடுப்பவருக்கு மிகப்பெரிய பாவத்தை ஏற்படுத்தும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. எனவே பிறருக்கு எந்த பொருள்களை தானமாகவோ இலவசமாகவோ கொடுக்க கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆடைகளை தானமாக கொடுப்பது தானங்களில் சிறந்த தானமாக பார்க்கப்படுகிறது. எனினும் இதற்கு நாம் புதிய துணிகளையோ அல்லது பயன்படுத்தி நல்ல நிலையில் இருக்கும் துணிகளையும் தானமாக கொடுக்க வேண்டும். கிழிந்த மற்றும் லேசாக தீயில் கருகிய துணிகளையோ அல்லது ஆடைகளையோ பிறருக்கு தானமாக கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால் அது கொடுப்பவருக்கு மிகப்பெரிய பாவத்தை ஏற்படுத்தும் என்று ஐதீகங்களிலும் சாஸ்திரங்களிலும் இருக்கிறது.
தானமாக கொடுக்க கூடாத பொருட்களில் உப்பு முக்கியமானது. இத்தனை நெருங்கிய உறவுகளாக இருந்தாலும் உப்பை தானமாக கொடுக்கவும் கூடாது பிறரிடம் இருந்து தானமாக பரவும் கூடாது. யாராக இருந்தாலும் உப்பு வாங்க நேர்ந்தால் அதற்குரிய தொகையை அவர்களிடம் செலுத்தி விட வேண்டும். ஏனெனில் வீட்டில் மகாலட்சுமி இருக்கும் பொருட்களில் உப்பு மிகவும் முக்கியமானது. இதன் காரணமாகத்தான் உப்பை தானமாக கொடுக்கக் கூடாது என சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
மேலும் நாம் வீட்டை சுத்தம் செய்வதற்கு வைத்திருக்கும் துடைப்பத்தை யாருக்கும் தானமாக கொடுக்கக் கூடாது. அது நாம் புதியதாக வாங்கி வைத்திருக்கும் துடைப்பமாக இருந்தாலும் சரி. ஏனெனில் துடைப்பத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் துடைப்பத்தை தானமாக கொடுக்கும் போது அதில் இருக்கும் மகாலட்சுமியின் அருள் அடுத்தவர்களுக்கு சென்று விடும் என்பதால் அதனை தானமாக கொடுக்க வேண்டாம் என சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன.