இந்த நாளில் குலதெய்வத்தை வழிபட மறந்துறாதீங்க..!! வீடுகளிலும் இதை செய்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கும்..!!
பெளர்ணமி, முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்நாளில் நல்ல அதிர்வலைகள் உலகில் வியாபித்திருக்கும். அப்படிப்பட்ட சக்தி மிகுந்த நாளில், குலதெய்வ வழிபாடு செய்தால், தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும். பௌர்ணமி நாளில் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபட்டால் மிகச் சிறப்பு. அதேபோல் வீட்டில் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுவதும் வீடு மனை முதலான செல்வங்களை வாங்குகிற பாக்கியத்தைக் கொடுக்கவல்லது.
ஒவ்வொரு பெளர்ணமி தினத்தன்றும் மாலையில், சந்திரன் தோன்றும் வேளையில், வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து குலதெய்வத்தை ஆராதிப்பது விசேஷமானது. பெளர்ணமி நாளில், குல்தெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. இந்த நன்னாளில், குலதெய்வக் கோயில் அருகில் இருந்தால், வழிபட்டு வருவது நன்மைகளை வாரி வழங்கும். சந்ததியினர் சிறக்க வாழ்வார்கள். குலதெய்வம் பூர்வீகக் கிராமத்தில், வெளியூரில் இருந்தால், மாதந்தோறும் பெளர்ணமி நாளில், குலதெய்வக் கோயிலுக்குச் செல்வது இயலாததாக இருந்தால், வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபடலாம்.
குலசாமி படத்துக்கு மாலை அணிவித்து அல்லது பூக்களால் அலங்கரித்து குலசாமிக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் முதலான குலதெய்வத்துக்கு படையலிடும் உணவை நைவேத்தியமாகச் செய்து வேண்டிக் கொள்ளலாம். இதனை அக்கம் பக்கத்தினருக்கு வழங்கினால் நல்லது.