முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வீட்டில் ஏசி போடும் முன் இந்த விஷயத்தை செய்ய மறந்துறாதீங்க..!! உயிருக்கே ஆபத்து..!!

02:21 PM May 07, 2024 IST | Chella
Advertisement

லேப்டாப், வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் போன்றவற்றை வெறும் கால்களுடன் தொடும்போது பல சமயங்களில் ஷாக் அடிக்கும். அதற்கு காரணமே வீட்டில் எர்த்திங் (Earthing) செய்யாதது தான். மின்சாதனத்தில் கோளாறு ஏற்பட்டாலும், மின்சாரம் அதில் பாயும்போது அதை தற்செயலாக தொட்டாலும் கடும் ஆபத்தை விளைவிக்கலாம். அதிக வோல்டேஜில் மின்சாரம் வரும்போது, மின்சாதனத்தின் கேபிள் இறுக்கமாக இல்லையென்றால், சாதனத்தை தொடுபவர்களுக்கு ஷாக் அடிக்கலாம்.

Advertisement

மின்சாரத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, வீட்டில் ஏசி அல்லது எந்தப் பெரிய உபகரணங்களையும் நிறுவும் முன்பு எர்த்திங் செய்ய வேண்டும். வீடு கட்டும்போதே, அந்த செலவோடு எர்த்திங் செய்தால், பல ஆபத்துக்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். அடிப்படையில் வீட்டில் நான்கு விதமான எர்த்திங் செய்யப்படுகிறது. இதில் பட்டை, தட்டு, குழாய் மற்றும் ஸ்ட்ரிப் எர்த்திங் ஆகியவை அடங்கும். உங்கள் வசதி மற்றும் தேவைக்கேற்ப ஏதேனும் ஒன்றை நீங்கள் செய்யலாம். முக்கியமாக, எர்த்திங் செய்வதற்கு முன்பு பயிற்சி பெற்ற எலக்ட்ரீஷியனை அணுக மறவாதீர்கள்.

Read More : செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வாங்குவது எப்படி..? ஆன்லைனில் நீங்களே வாங்கலாம்..!!

Advertisement
Next Article