செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மறக்காம இதை பண்ணுங்க..!! நல்ல வருமானம் உங்களை தேடி வரும்..!!
நீங்கள் வருமானம் இல்லாமல் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக கூடிய விரைவில் சீக்கிரத்தில் நல்ல வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பின்பு அதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்கி விடுவீர்கள்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஆண்கள் பெண்கள் யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அல்லது இரண்டு பேரும் இந்த பரிகாரத்தை செய்தாலும் தவறு கிடையாது. காலையில் எழுந்து குளிக்கும்போது கொஞ்சமாக தயிரை எடுத்து உங்களுடைய முகம் கை கால் உடம்புகளில் லேசாக பூசி விட்டு அதன் பின்பு குளிக்க வேண்டும்.
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை இந்த தயிர் சேர்த்து குளியலை மேற்கொள்ளும் போது, நம் உடலில் இருக்கும் பீடை விலகும். தரித்திரம் விலகும். லட்சுமி கடாட்சம் பிறக்கும். இந்த முறையில் செவ்வாய் கிழமையும், வெள்ளிக்கிழமையும் குளித்துவிட்டு பூஜை அறைக்கு வந்து ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அமர்ந்து மனதார உங்கள் பணக்கஷ்டம் தீரவேண்டும் என்று குபேரரையும் மகாலட்சுமி தேவியையும் குலதெய்வத்தையும் பிரார்த்தனை செய்து கொண்டு, பின் சொல்லக்கூடிய மந்திரத்தை 27 முறை உச்சரித்து நமஸ்காரம் செய்து கொண்டு, பிறகு உங்களுடைய வேலைகளை தொடங்குங்கள்.
”ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் குபேர கமல தாரணியை மகாலட்சுமியை நமஹ”. மந்திரத்தை முழுமனதோடு நம்பிக்கையுடன் உச்சரித்து மேல் சொன்ன வழிபாட்டை செய்து வருபவர்களுக்கு நிச்சயம் பணக்கஷ்டம் தீரும். முடிவில்லா கஷ்டங்களுக்கு கூட சீக்கிரத்தில் விடிவு காலம் பிறக்கும்.