முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இஎம்ஐ-இல் பொருட்கள் வாங்கும் முன் இதை மறந்துறாதீங்க..!! சிக்கல் உங்களுக்கு தான்..!!

05:40 AM May 16, 2024 IST | Chella
Advertisement

விலை அதிகமாக உள்ள பொருட்களை கஸ்டமர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அதற்கான செலவை குறிப்பிட்ட நேரத்திற்கு நீட்டிப்பதன் மூலமாக EMI அல்லது ஈகுவேட்டட் மன்த்லி இன்ஸ்டால்மென்ட் செயல்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ், ஃபர்னிச்சர் மற்றும் வாகனங்கள் போன்ற பொருட்களுக்கான தொகையை ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக செலுத்தாமல், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தி வாங்கிக் கொள்ளும் வசதியே EMI ஆகும். EMI ஆப்ஷன்கள் பல்வேறு ரீடைல் கடைகள், ஆன்லைன் பிளாட்ஃபார்ம்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிடைக்கிறது.

Advertisement

ஷாப்பிங் செய்வதை EMI எளிதாக்குகிறது என்றாலும் கூட, EMI இல் பொருட்களை வாங்கும்போது, நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் பல உள்ளன. எந்தவிதமான பொருளாதார சிக்கல்களையும் தவிர்ப்பதற்கு EMI மூலமாக ஷாப்பிங் செய்யும்போது, நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

EMI தொகையை உங்களால் வழக்கமான முறையில் செலுத்த முடியுமா என்பதை தெரிந்து கொள்வதற்கு உங்களுடைய பொருளாதார நிலைப்பாட்டையும், திறனையும் அளவிட வேண்டும். EMI பேமெண்ட்களை நீங்கள் சரியான நேரத்தில் செலுத்தாவிட்டால், அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதித்து, அபராதம் செலுத்த நேரிடும். உங்களது வழக்கமான செலவு மற்றும் EMI தொகையை உங்களால் செலுத்தும் வகையில் உங்களிடம் வருமானம் இருக்க வேண்டும். மேலும், EMI எடுக்கும்போது, பல்வேறு லெண்டர்கள் வழங்கும் வட்டி விகிதங்கள் மற்றும் விதிகள் போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்து முடிவு எடுங்கள்.

EMI என்பது ஒரு பொருளின் விலையை குறிப்பிட்ட காலத்திற்கு நீட்டிக்கிறதே தவிர அதனை நீங்கள் வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பொருளுக்கான உரிமையை பெறுவதற்கு அந்த பொருளின் விலை மற்றும் அதற்கான வட்டி ஆகிய செலவுகளை நீங்கள் ஏற்க வேண்டும். EMI ஆப்ஷனுடன் தொடர்புடைய வட்டி விகிதங்களை நன்கு புரிந்து கொள்ளுங்கள். இந்தியாவில் EMI ஆப்ஷன்கள் பெரும்பாலும் வட்டி விகிதங்களுடன் வருகிறது. இந்த வட்டியானது ப்ராடக்ட், EMI கால அளவு மற்றும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் போன்றவற்றின் அடிப்படையில் அமைகிறது. சிறிய தொகையிலான பொருட்களை EMIஇல் வாங்குவது புத்திசாலித்தனமான யோசனையாக இருக்காது.

ப்ராசசிங் கட்டணம், ப்ரீ பேமெண்ட் கட்டணங்கள் அல்லது தாமதமாக பேமெண்ட் செலுத்துவதற்கான கட்டணங்கள் போன்ற மறைமுக கட்டணங்கள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இந்த கட்டணங்கள் உங்களுடைய பொருளின் விலையை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து விட கூடும். EMIஇல் எடுக்கும் முன்பு அதற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படிக்க வேண்டும். EMI லோன்களை செயல்முறைப்படுத்துவதற்கான கட்டணங்களை ஒரு சில லெண்டர்கள் வசூல் செய்கிறார்கள். இந்த கட்டணத்தையும் நீங்கள் அந்த ப்ராடக்ட்டின் விலையோடு சேர்க்க வேண்டும்.

ஒரு ப்ராடக்ட் வாங்கும்போது, குறிப்பிடத்தக்க அளவு தொகையை டவுன் பேமெண்டாக நீங்கள் செலுத்த வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் டவுன் பேமெண்ட் செலுத்துகிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் குறைவான வட்டி செலுத்தினால் போதுமானது. எனவே நீங்கள் வாங்கும் ப்ராடக்ட்டில் டவுன் பேமெண்ட் ஆப்ஷன் இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். EMI லோனுக்கு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வட்டி விகிதம் உங்களின் கிரிடிட் ஸ்கோரை பாதிக்கலாம்.

உங்களிடம் அதிக கிரிடிட் ஸ்கோர் இருந்தால் உங்களுக்கு குறைவான வட்டி விகிதம் வழங்கப்படும். EMI திட்டங்களுக்கான தகுதி வரம்பு மற்றும் வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதில் கிரெடிட் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, EMI ஆப்ஷனை தேர்ந்தெடுக்கும் முன்பு உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

Read More : EPFO கணக்கில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம்..!! உங்களுக்கு சேர்ந்துவிட்டதா..? எப்படி தெரிந்து கொள்வது..?

Advertisement
Next Article