For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தை மாதத்தில் வரும் இந்த நாட்களை மறந்துறாதீங்க..!! அன்றைய தினம் இப்படி செய்தால் சகல நன்மைகளும் கிடைக்கும்..!!

It is said that when Tai is born, a path is born. On the first day of the month of Tai, the Dakshinaya Punya Kaal ends and the Uttarayana Punya Kaal begins.
07:59 AM Jan 17, 2025 IST | Chella
தை மாதத்தில் வரும் இந்த நாட்களை மறந்துறாதீங்க     அன்றைய தினம் இப்படி செய்தால் சகல நன்மைகளும் கிடைக்கும்
Advertisement

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதம் முதல் நாளில் தட்சிணாய புண்ணிய காலம் முடிந்து உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகிறது. 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வரும் சூரியன், அவருடைய பாதையை தென் திசையில் இருந்து வடதிசைக்கு மாற்றுகிறார். அதனால் தான் தை மாதத்தின் முதல்நாள் சூரியனுக்கு நன்றி தெரிவித்து, அறுவடையால் பெற்ற பலனுக்காக விளைச்சலுக்கு உதவிய சூரியனை வணங்குகிறோம்.

Advertisement

தைப்பூசம் : தை மாதத்தில் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்த நாளில் சிவபெருமான் மற்றும் முருகன் ஆலயங்களில் விமரிசையாக கொண்டாடப்படும். அன்றைய தினம் அம்பிகை மற்றும் முருகன் ஆலயங்களில் நடைபெறும் தெப்ப உற்சவத்தில் கலந்து கொள்ளலாம்.

தை அமாவாசை : நம் முன்னோர்கள் ஆடி அமாவாசையில் பூவுலகம் வந்து புரட்டாசியில் நம்முடன் தங்கியிருந்து தை அமாவாசையில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம். இந்நாளில் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பைரவ வழிபாடு : தை மாதத்தில் வரும் முதல் செவ்வாய் கிழமை முதல் தொடங்கி அனைத்து செவ்வாய் கிழமைகளில் பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபட்டால், சகல நன்மைகளும் கிடைக்கும்.

சபலா ஏகாதசி : தை மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி சபலா ஏகாதசியில் முழு உபவாசம் இருந்து விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

ரத சப்தமி : தை மாதத்தின் வளர்பிறையில் வரும் சப்தமி திதியில் சூரியன் தனது வடஅரைக்கோளப் பயணத்தை தொடங்குகிறார். அன்றைய தினம் நதி அல்லது சமுத்திரக் கரைகளில் நீராடுவது மிகச் சிறப்பு. வீடுகளில் நீராடும்போது 7 எருக்கம் இலைகள், அட்சதையோடு சேர்த்துத் தலையில் வைத்துக்கொண்டு நீராடினால் நமது பாவங்கள் நீங்கும்.

புத்ரதா ஏகாதசி : தை மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி புத்ரதா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் விரதமிருந்து மறுநாள் நெல்லிக்கனியுடன் அகத்திக்கீரை எடுத்து விரதத்தை நிறைவு செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

தை வெள்ளி : தை மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமையில் அம்பிகை வழிபாடு சிறப்பு வாய்ந்தது. தை வெள்ளிக்கிழமைகளில் அபிராமி அந்தாதி, சவுந்தர்ய லஹரி என அம்பிகை பாடல்களை பாடலாம். இத்தனை சிறப்பு உடைய மாதமான தை மாதத்தில் திருநாட்களைக் கொண்டாடுவோம். வாழ்வில் வளம் பெறுவோம்.

Read More : ஆந்திராவில் பயங்கர விபத்து..!! 4 தமிழர்கள் உயிரிழப்பு..!! 22 பேர் படுகாயம்..!! திருப்பதி சென்றுவிட்டு திரும்பியபோது சோகம்..!!

Tags :
Advertisement