குடையை மறந்துறாதீங்க..!! தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!! வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!
மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவி வருகிறது. இதனால், தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் நவ.20ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (நவம்பர் 15) தமிழ்நாட்டில் உள்ள 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Read More : நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவால் தலைமறைவான நடிகை கஸ்தூரி..? வலைவீசி தேடும் போலீஸ்..!!