மூளையை தாக்கும் ஒட்டுண்ணியா.? "ப்ளீஸ், இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க."!
நம் உடல் ஆரோக்கியத்திற்காகவும் நலமுடன் இருப்பதற்காகவும் உணவுகளை தேர்வு செய்து உண்டு வருகிறோம். எனினும் சில நேரங்களில் நமது உணவுகளே நமக்கு நோய்கள் ஏற்படுவதற்கு காரணியாக அமைந்து விடுகிறது. சில உணவுகளின் மூலம் நமது மூளையை ஒட்டுண்ணிகள் தாக்கும் அபாயம் இருப்பதாக உடனடிபுணர்களும் மருத்துவளிப்புனர்களும் எச்சரிக்கின்றனர்.
இந்த ஒட்டுண்ணிகள் உணவின் வழியாக உடலில் சென்று மனிதனின் மூளையில் தங்கி விடுகின்றன. இவை நமது மூளையை தாக்குவதால் வலிப்பு, தலைவலி, மனநல குறைபாடு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த மூன்று உணவுகளை தவிர்த்துக் கொள்வதன் மூலம் நமது மூளையை ஒட்டுண்ணிகள் தாக்குவதில் இருந்து காத்துக் கொள்ளலாம். அவை என்ன உணவுகள் என்று எந்த பதிவில் பார்ப்போம்.
பொதுவாக பன்றி இறைச்சி அதிக புரதத்திற்காக சாப்பிடப்படுகிறது. சரியாக வேக வைக்கப்படாத பன்றி இறைச்சியில் மூளையை தாக்கக்கூடிய ஒட்டுண்ணிகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றை சாப்பிடும் போது நமது உணவின் வழியாக மூளைக்குள் ஊடுருவும் இந்த ஒட்டுண்ணிகள் மூளையில் தங்கி பல்கி பெருகி உடலில் பல்வேறு விதமான நோய் தாக்குதல்களை ஏற்படுத்துகிறது.
புரதச்சத்து நிறைந்த மற்றொரு உணவான சால்மன் மீனும் ஒட்டுண்ணிகள் நமது மூளையை தாக்குவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக பண்ணைகளில் வளர்க்கப்படும் சால்மன் மீன்கள் அதிக அளவு ஒட்டுண்ணிகள் கொண்டிருப்பதாக உணவு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நன்னீர் ஏரிகளில் வாழும் மீன்களை பயன்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.. ஜப்பான் நாட்டின் பிரபலமான உணவான சூஷியிலும் ஒட்டுண்ணிகள் இருப்பதால் அதனையும் தவிர்க்கும் படி மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆகவே இந்த 3 உணவுகளை தவிர்த்து கொள்ளுதல் உடல்நலத்திற்கு நல்லது.