சிக்கனின் இந்த பாகங்களை தெரியாம கூட சாப்பிடாதீங்க.. புற்றுநோய் கூட ஏற்படலாம்..
சிக்கன் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பலரின் ஃபேவரைட் உணவாக சிக்கன் தான் உள்ளது. சிக்கனில் புரதம் நிறைந்துள்ள நிலையில், கொழுப்பும் குறைவாகவே உள்ளது. சிக்கன் சாப்பிடுவதால் தசை ஆரோக்கியத்திற்கு நன்மைபயக்கிறது. சிக்கனில் புரதம் மட்டுமின்றி பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற பல தாதுக்கள் நிறைந்துள்ளன. எனவே சிக்கன் சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது.
டிரிப்டோபான் மற்றும் வைட்டமின் பி5 ஆகிய இரண்டு சத்துக்கள் சிக்கனில் உள்ளது. இவை இரண்டும் உங்கள் உடலில் அமைதியான விளைவைக் கொண்டிருக்கின்றன. மன அழுத்தத்தை குறைப்பதிலும் சிக்கன் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆண்கள் துத்தநாகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், ஏனெனில் இது டெஸ்டோஸ்டிரோன் அளவை சீராக்க உதவுகிறது. விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. அந்த வகையில் சிக்கனில் இருக்கும் துத்தநாகம் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும்.
சளி, காய்ச்சல் மற்றும் பிற பொதுவான சுவாச நோய்த்தொற்றுகளைப் போக்க சிக்கன் சூப் நீண்ட காலமாக வீட்டு தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது. சிக்கன் சூப்பில் இருக்கும் நியூட்ரோபில்ஸ் இது நோயெதிர்ப்பு செல்கள் இடம்பெயர்வதைத் தடுக்கிறது, இதனால் பொதுவான நோய்த்தொற்றுகளின் போது ஏற்படும் அழற்சியைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சிக்கன், வைட்டமின் பி6 நிறைந்துள்ளதால், மாரடைப்பைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாரடைப்பு அபாயத்துடன் தொடர்புடைய முக்கிய கூறுகளில் ஒன்றான ஹோமோசைஸ்டீனின் அளவைக் குறைப்பதன் மூலம் வைட்டமின் பி6 உதவுகிறது.
மேலும் சிக்கனில் உள்ள நியாசின் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது, இது இதய நோய் வளர்ச்சிக்கான ஆபத்து காரணியாகும். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் மேலும் சிகப்பு இறைச்சியை சாப்பிடுவதை பரிந்துரைக்கிறது, ஏனெனில் இது குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டுள்ளது மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும்.
சிக்கனில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அதன் குறிப்பிட்ட பாகங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே அவற்றை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் சிக்கன் தோலில் அதில் அதிக கொழுப்பு உள்ளது. மேலும் அதில் ரசாயன ஊசிகள் செலுத்தப்படுகின்றன. இதயநோய் நிபுணர்கள் இதைத் தவிர்க்க அறிவுறுத்துகிறார்கள்.
விற்பனையை அதிகரிக்க, பிராய்லர் கோழி தொடைகளில் எடையை அதிகரிக்க ஊசிகள் போடப்படுகின்றன. தொடை மற்றும் கால் துண்டுகள் உணவகங்களில் பிரபலமாக உள்ளன. ஆனால் அவற்றை தவிர்க்க வேண்டும் அறிவுறுத்தப்படுகிறது.
சிக்கன் தலையில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் குவிந்துள்ளதால் தவறுதலாக கூட சிக்கன் தலையை சாப்பிடக்கூடாது.
அதே போல் சிக்கன் குடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுக்கள் நிறைந்துள்ளன. மேலும் குடலில் சாப்பிட்டால் இதய நோய் சாப்பிடும் ஆபத்து அதிகம். எனவே ஒருபோதும் சிக்கன் குடலை சாப்பிடக்கூடாது.
சிக்கன் நுரையீரல் எண்ணற்ற ஒட்டுண்ணிகள், பாக்டீரியாக்கள் இருக்கும். என்னதான் இதனை சுத்தம் செய்தாலும் அவை அழியாது. எனவே சிக்கன் நுரையீரலை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
சிக்கனின் கழுத்தில் நச்சுக்கள், கிருமிகள் அடங்கிய நிணநீர் முனைகள் இருக்கும், இதனை அடிக்கடி உட்கொண்டா புற்றுநோய் ஆபத்தை கூட அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே சிக்கன் கழுத்தை சாப்பிடக்கூடாது.
அதே போல் சிக்கன் கால்களில் பல ஹார்மோன்கள் இருக்கும். இதனை தொடர்ந்து உட்கொள்ளும் போது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
Read More : உஷார்.. குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடிக்கிறீங்களா? மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்..!!