முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த இரண்டு உணவுப் பொருட்களையும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டால் விஷமாகுமா.? என்ன சொல்கிறது ஆயுர்வேதம்.?

06:00 AM Dec 09, 2023 IST | 1newsnationuser4
Advertisement

இந்த மாதிரியான உணவு உண்ண வேண்டும் மற்றும் எந்த உணவுப் பொருட்களை அவற்றுடன் சேர்த்து உண்ணக்கூடாது என நமது ஆயுர்வேத மருத்துவம் வரையறுத்து வைத்திருக்கிறது. சில உணவுகளை வேறொரு உணவு பொருளுடன் சேர்த்து சாப்பிடும் போது அந்த உணவுப் பொருட்களின் தன்மைகள் காரணமாக உடலுக்கு பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் இவற்றால் மரணம் கூட நிகழலாம் என எச்சரிக்கிறது ஆயுர்வேத மருத்துவம். எந்தெந்த உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

எல் மற்றும் பசலைக் கீரையை சேர்த்து சாப்பிடக்கூடாது. இவை நம் உடலில் இருக்கும் தோஷங்கள் ஆன பித்தம் கபம் ஆகியவற்றின் தன்மைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் வாந்தி வயிற்றுப் போக்கு மற்றும் மயக்கம் ஏற்படக்கூடும் என ஆயுர்வேத மருத்துவம் எச்சரிக்கிறது. மீனுடன் திப்பிலியை சேர்த்து சாப்பிடக்கூடாது. இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு மரணம் நிகழும். மீன் பொரித்த எண்ணையைக் கூட திப்பிலியுடன் சேர்த்து பயன்படுத்தக் கூடாது. இதற்கு அந்த இரண்டு பொருட்களில் இருக்கும் சத்துக்கள் மற்றும் மூலக்கூறுகள் காரணமாக அமைகிறது. இவை ஒன்றுடன் ஒன்று கலக்கும்போது வேதியியல் மாற்றம் ஏற்பட்டு உணவு நஞ்சாகிறது.

தேன் சாப்பிட்ட பிறகு இனிப்பு பொருட்களையோ அல்லது ஒயின் போன்ற மது வகைகளையோ சாப்பிடக்கூடாது. இதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படும் என எச்சரிக்கிறது ஆயுர்வேதம். மீன் மற்றும் முள்ளங்கி தேன் மற்றும் நெய் ஆகியவற்றையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. இவை அஜீரணக் கோளாறு மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். முள்ளங்கி முருங்கை கீரை மற்றும் பூண்டு சாப்பிட்ட பிறகு பால் குடிக்க கூடாது இது சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும். இதுபோன்ற உணவுகளை கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துக் கொள்வது நலம்.

Tags :
AYURVEDHAFOOD POISONFoods To Avoidhealth tipslife style
Advertisement
Next Article