தவறுதலாக கூட பாப்பாளியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது..! உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்..!
பெரும்பாலான நபர்களால் அதிகம் உண்ணப்படும் பழம் பப்பாளி. இந்த பப்பாளி பழம் கிட்டத்தட்ட எல்லா சீசனிலும் கிடைக்கக்கூடியவை. இந்த பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. பல்வேறு நன்மைகளை அளிக்கும் இந்த பப்பாளி பழத்தை ஒரு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
டீ : பப்பாளி சாப்பிட்ட உடனேயே டீ குடிப்பதால் வாயு, வீக்கம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும். இந்த பழக்கம் தொடர்ந்தால், அது நீண்ட கால இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எலுமிச்சை : பப்பாளியை எலுமிச்சையுடன் கலந்து சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் ஏற்படுவதோடு இரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் சமநிலையின்மை ஏற்படும். உங்கள் உடல்நிலையில் ஏற்படும் பாதகமான விளைவுகளை தவிர்க்க இவை இரண்டையும் தனித்தனியாக உட்கொள்வது நல்லது.
பால்: பப்பாளியில் உள்ள பாப்பைன் என்சைம், பாலில் உள்ள புரதங்களின் செரிமானத்தைத் தடுக்கிறது, இதனால் வாயு, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு கூட ஏற்படுகிறது.
முட்டை : புரதச்சத்து நிறைந்த முட்டைகளை பப்பாளியுடன் சேர்த்து சாப்பிட்டால் குமட்டல் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை அல்லது திராட்சைப்பழங்கள் போன்ற அமிலப் பழங்களுடன் பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிட்ரஸ் பழங்களின் அதிக அமிலத்தன்மை பப்பாளியுடன் சேர்ந்தால், அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சலைத் தூண்டும்.
Read More: 14 நாட்கள் சர்க்கரையை தவிர்ப்பதால் உடலில் என்ன மாற்றம் நிகழும்?