கடைகளில் விற்கப்படும் இந்த 31 தின்பண்டங்களை சாப்பிடாதீங்க..!! FSSAI எச்சரிக்கை..!!
கேரள மாநிலம் குடகு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் விற்கப்படும் 31 தின்பண்டங்களை தரமற்றதாக இருப்பதாக கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கண்டறிந்துள்ளது. கேரளா பக்கம் போனால் நம் நினைவுக்கு வருவது சிப்ஸ் தான்.
ஆனால் தற்போது, சிப்ஸ் பாக்கெட்கள், அல்வா, மசாலா மிக்சர்கள், முறுக்கு மற்றும் உலர் பழங்கள் உள்ளிட்டவை FSSAI ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் போது, அசோரூபின், சன்செட் மஞ்சள், அல்லுரா சிவப்பு மற்றும் டார்ட்ராசின் போன்ற செயற்கை நிறங்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அந்த பொருட்கள் அனைத்தும் மங்களூரு, மடிகேரி, தட்சிண கன்னடா, சாமராஜநகர், குடகு மற்றும் மைசூர் போன்ற கர்நாடகாவில் விற்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது.
மேலும், இது போன்ற செயற்கை நிறங்கள் பயன்படுத்துவதன் மூலமாக குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக படை நோய், ஆஸ்துமா, அனாபிலாக்ஸிஸ் போன்ற ஒவ்வாமை நோய்களும் உண்டாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக விசாரித்து தகவல் அறியுமாறு கேரள அரசுக்கு கர்நாடகா அரசு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
Read More : ஆர்த்தியுடன் பேசிய ஜெயம் ரவி..!! பதிலுக்கு அவர் சொன்ன அந்த வார்த்தை..!! வெச்சி செய்யும் நெட்டிசன்ஸ்..!!