முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடாதீங்க.. உயிருக்கே ஆபத்து! மருத்துவர்கள் வார்னிங்!
பொதுவாக அதிக நாட்கள் உருளைக்கிழங்கை சேமித்தால் அது பச்சை நிறமாக மாறி, முளைவிட தொடங்கும். இந்த உருளைக்கிழங்கை சாப்பிடுவது பாதுகாப்பானதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். சிலர் முளைவிட்ட பகுதியை மட்டும் வெட்டிவிட்டு சமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் முளைவிட்ட உருளைக்கிழங்கை கட்டாயம் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
முளைவிட்ட உருளைக்கிழங்கில் அதிக அளவு கிளைகோல்கலாய்டுகள் நிறைந்துள்ளன. இதனை அதிகமாக உண்ணும்போது நமக்கு உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.. இதனால் வயிற்றுக் கோளாறு முதல் இதயம் மற்றும் நரம்பு மண்டலப் பிரச்சினைகள் வரை பல பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் சில, கடுமையான சந்தர்ப்பங்களில், மரணம் கூட ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்..
முளைவிட்ட உருளைக்கிழங்கு நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும், அதுஉணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சில நேரங்களில் இது மரணத்தையும் ஏற்படுத்தும் என்பதால் முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடக் கூடாது என்று எச்சரிக்கின்றனர்..
முளைவிட்ட உருளைக்கிழங்கு ஏன் ஆபத்தானது?
உருளைக்கிழங்கு சோலனைன் மற்றும் சாகோனைனின் இயற்கையான மூலமாகும். சிறிய அளவில் உட்கொள்ளும் போது, கிளைகோஅல்கலாய்டுகள் ஆண்டிபயாடிக் பண்புகள் மற்றும் இரத்த-சர்க்கரை- மற்றும் கொலஸ்ட்ரால்-குறைக்கும் விளைவுகளை உள்ளடக்கிய ஆரோக்கிய நலன்களை வழங்குகின்றன.
இருப்பினும், அவை அதிகமாக உண்ணும் போது நச்சு மற்றும் உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்கும். பச்சை நிறம் குளோரோபில் இருந்து வருகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒரு உருளைக்கிழங்கு முளைவிட தொடங்கும் போது, அதன் கிளைகோல்கலாய்டு உள்ளடக்கம் உயரத் தொடங்குகிறது. இதை சாப்பிடும் போது, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் அதிக அளவுகளில் நரம்பியல் அறிகுறிகளை கூட ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பிற அறிகுறிகள் என்னென்ன?
குறைந்த இரத்த அழுத்தம்
விரைவான துடிப்பு
அதிக காய்ச்சல்
தலைவலி
குழப்பம்
மரணம்
முளைவிட்ட உருளைக்கிழங்கில் இருந்து நச்சுத்தன்மையைக் குறைப்பது எப்படி?
உருளைக்கிழங்கு நச்சுத்தன்மையைக் குறைப்பதற்கும் அகற்றுவதற்கும் சிறந்த வழி, அவற்றைத் தூக்கி எறிவதே ஆகும், ஆனால் பச்சை மற்றும் துளிர் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே குவிந்திருந்தால், அவற்றை கூர்மையான கத்தியால் அகற்றி, மீதமுள்ள உருளைக்கிழங்குடன் சமைக்கலாம். இருப்பினும், சமைக்கப்படும் போது அதில் இருக்கும் நச்சுக்கள் அழியாது என்பதால், முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடுவது தவிர்ப்பதே நல்லது.
Read More : குளிர்காலத்தில் எலும்புகள், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க.. தினமும் இதை சாப்பிட்டால் போதும்…