இந்தப் பழங்களை சாப்பிட்டால் மறந்தும் தண்ணீர் குடித்து விடாதீர்கள்… காரணம் இதுதான்.!
பழங்கள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாகும். மேலும் பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. இவற்றால் நமது உடல் நலன் மற்றும் ஆரோக்கியம் மேம்படுகிறது. அதேபோன்றுதான் ஒரு நாளைக்கு 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனினும் சில படங்கள் சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் அது நமது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
எந்த பழங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். வாழைப்பழம் உடலுக்கு சக்தியையும் ஆற்றலையும் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பொட்டாசியம் மற்றும் மாங்கனிசு போன்ற மினரல்கள் நிறைந்திருப்பதால் வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக உடலில் பொட்டாசியம் மற்றும் சோடியத்தின் சமநிலை பாதிக்கப்படலாம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தர்பூசணி நீர்ச்சத்து நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு பழமாகும். இந்த பழத்தை சாப்பிட்ட பின்பும் நீர் குடிக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தர்பூசணியில் அதிகமான நீர்ச்சத்து இருப்பதால் அதை சாப்பிட்ட பிறகு அதிக அளவு தண்ணீர் குடிப்பது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு வயிறு தடிமனாகும் பிரச்சனையும் ஏற்படும் என அறிவுறுத்துகின்றனர். மாம்பழத்தில் அதிக அளவு என்சைம்கள் இருக்கின்றன . இதனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகும் அதிக அளவு தண்ணீர் குடிப்பது அஜீரணக் கோளாறு ஏற்படுத்தும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மேலும் பப்பாளி அன்னாசி மற்றும் ஆரஞ்சு பழங்கள் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது இவற்றில் இருக்கக்கூடிய என்சைம்கள் என்ற நொதிகளாகும் . இந்த நொதிகள் அதிக அளவு தண்ணீர் காரணமாக அஜீரணக் கோளாறு மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் இன மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பழங்களில் இருக்கக்கூடிய நீர்ச்சத்து நமக்கு போதுமானதாக இருக்கிறது. இதனால் இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.