பழங்கள் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக தண்ணீர் குடிக்க கூடாது.. ஏன் தெரியுமா.!?
பழங்கள் சாப்பிடுவதால் நம் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுகின்றன. ஆனால் பழங்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டுவிட்டு 2 மணி நேரத்திற்கு தண்ணீர் எதுவும் குடிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கு காரணம் என்ன தெரியுமா?
பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானதாக இருந்தாலும் அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவு ஒரு சிலரின் உடல் அமைப்புக்கு ஒத்துப் போகாது. மேலும் சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு இப்படி ஒரு சில நோயுள்ளவர்கள் பழங்களை சாப்பிடக்கூடாது.
மேலும் பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதச்சத்து, நார் சத்துக்கள், பிரக்டோஸ், ஈஸ்ட் போன்றவைகள் அதிகப்படியாக இருக்கின்றன. எனவே சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிக்கும் போது வயிற்றில் உள்ள அமிலங்களின் சமநிலையை கெடுக்கும். காரத்தன்மை அதிகரித்து உடலில் நோயை ஏற்படுத்துகின்றது.
வயிற்றில் காரத்தன்மை அதிகரிக்கும் போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். மேலும் இன்சுலின் அதிகமாக சுரந்து சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தசைப்பிடிப்பு, வயிற்றுவலி போன்ற நோய்களையும் உருவாக்கி உடலுக்கு கேடு விளைவிக்கும். இதனாலையே பழங்களை சாப்பிட்டுவிட்டு சிறிது நேரத்திற்கு தண்ணீர் குடிக்க கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.