”பெயர் கெட்டுவிடும் என அந்த விஷயத்தை மூடி மறைக்காதீங்க”..!! பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை..!!
பெயர் கெட்டுவிடும் என பாலியல் தொல்லை போன்ற சம்பவங்களை மூடி மறைக்கும் செயல்களில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் நவம்பர் 14ஆம் தேதி அன்று ஆண்டுதோறும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குழந்தைகள் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “நாளைய உலகின் சிற்பிகளாகிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள். "பிள்ளை சிரிக்கையில் சிரித்தது வையம்! சிரித்தது வானமே!" என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். நம் குழந்தைகளின் மகிழ்ச்சிதான் நம்மை இயக்குகிறது. அத்தகைய குழந்தைகளின் கல்வியோடு சேர்த்து அவர்களின் தனித்திறமைகளையும் போற்றி வளர்ப்போம். குழந்தைகளைக் கொண்டாடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், பெயர் கெட்டுவிடும் என பாலியல் தொல்லை போன்ற சம்பவங்களை மூடி மறைக்கும் செயல்களில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார். மேலும் 1417, 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் மாணவர்கள் அச்சமின்றி புகாரளிக்கலாம் என்றும் பள்ளியில் இருந்து குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதாக இருந்தால், பெற்றோர் அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்
Read More : மாஸ் காட்டும் பத்திரப்பதிவுத்துறை..!! மக்களே அமைச்சர் சொன்னதை கவனிச்சீங்களா..?