குழந்தைகள் முட்டை சாப்பிட மாட்றாங்களா.. கொஞ்சம் வித்தியாசமாக இப்படி செய்து கொடுத்து பாருங்க..!!
பொதுவாக குழந்தைகளுக்கு தினமும் காலை உணவாக ஆரோக்கியமானதாகவும், சுவையானதாகவும் கொடுக்க வேண்டும். ஆனால் பல பெற்றோர்களுக்கும் காலை உணவு குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி எவ்வாறு செய்து கொடுக்கலாம் என்பது குறித்து குழப்பமாகவே இருக்கும் குறிப்பாக ஊட்டச்சத்து நிறைந்த முட்டையை எப்படி கொடுத்தாலும் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு முட்டையை இந்த மாதிரி சமைத்து கொடுத்து பாருங்க?
சீஸ் எக் ரோல் செய்ய தேவையான பொருட்கள் :
முட்டை - 3, உப்பு - தேவையான அளவு,
சிவப்பு மிளகாய் தூள் - 1/4டீஸ்பூன், வெண்ணெய் - தேக்கரண்டி, சாண்ட்விச் சீஸ் - 3
செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, சிவப்பு மிளகாய் தூள் போட்டு நன்றாக கலக்க வேண்டும். பின்பு தோசை கல்லில் வெண்ணெய் சேர்த்து அதில் முட்டையை ஊற்றி சீஸ் சேர்த்து முட்டை பாதி வெந்ததும் ரோல் போல செய்ய வேண்டும். இந்த ரோலை வட்டமாக வெட்டி தக்காளி சாஸ் சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள்.
Read more ; TVK Vijay : அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்.!