முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’அன்றாட தேவையை விட அதிகமா பால் வாங்காதீங்க’..!! சென்னை மக்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கோரிக்கை..!!

07:57 AM Dec 06, 2023 IST | 1newsnationuser6
Advertisement

'அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்' என அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

மிக்ஜாம் புயலினால் சென்னை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரண்டு நாள்களாக தொடர்ந்து புயல் காற்றுடன் நீடித்த கனமழை நேற்று நள்ளிரவு முதல் படிப்படியாக குறையத் தொடங்கியது. மழை குறைந்ததால் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் ஆவின் பால் இலவசமாக தரப்படும் என தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்திருந்தார். மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்களை மீட்பதற்கான பணியில் அதிகளவில் மீனவர்களின் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களான பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பொதுமக்கள் பேரிடர் காரணமாக ஏற்பட்ட தட்டுப்பாடு கருதி தேவைக்கு அதிகமாகவே வாங்கி குவித்து வருகின்றன.

இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், ‘இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதி ஆவின் பால் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டேன். நிலைமை நன்கு சீரடைந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் பதற்றமடைந்து அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம். அம்பத்தூர் பண்ணையில் வெள்ளம் வடிந்து சீரடையாத காரணத்தால், அங்கிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளில் சிறிது காலதாமதம் ஏற்படலாம்’ என தெரிவித்துள்ளார்.

Tags :
அமைச்சர் மனோ தங்கராஜ்ஆவின் பால்பால்
Advertisement
Next Article