முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"தயவுசெய்து நம் கலாச்சாரத்தில் இல்லாத ஒரு விஷயத்தை கொண்டு வராதீர்கள்" - இந்திய அணி குறித்து இர்பான் பதான் அதிருப்தி பேட்டி.!

02:22 PM Dec 03, 2023 IST | 1newsnationuser4
Advertisement

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கும் நிலையில் ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று பெங்களூரில் நடைபெற இருக்கிறது.

Advertisement

இதனைத் தொடர்ந்து இந்தியா தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் மூன்று கேப்டன்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் "நீண்ட காலமாக இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஃபார்மேட்டிற்கும் தனி கேப்டன் மற்றும் தனி பயிற்சியாளர் நியமிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. வீரர்களின் ஒரு லோடு மேனேஜ்மென்ட் தொடர்பாக இது போன்ற புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இது இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தில் இல்லாத ஒன்று" என தெரிவித்திருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் "இந்திய அணியில் ஒரு சில வீரர்களை தவிர பெரும்பாலான வீரர்கள் டெஸ்ட் ஒருநாள் போட்டி மற்றும் டி20 என மூன்று ஃபார்மட்டுகளிலும் விளையாடும் வீரர்களாக இருக்கிறார்கள். எனவே மூன்று வடிவத்திற்கும் ஒரு கேப்டன் நியமிக்கப்படுவதே சரியானதாக இருக்கும் என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Tags :
CaptainIrfan Pathannew teamTeam indiavirat kohli
Advertisement
Next Article