முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இதையெல்லாம் நம்பாதே..!! திருமணத்திற்கு முன்பே தனுஷை எச்சரித்த சுசித்ரா..!! பக்கா பிளான் போட்டு தூக்கிய ஐஸ்வர்யா..!!

Aishwarya Rajinikanth sent a bouquet to Dhanush when Kadhal Konden was released.
06:45 PM Sep 09, 2024 IST | Chella
Advertisement

பாடகி சுசித்ரா எப்போது பேட்டி கொடுத்தாலும் தமிழ் சினிமாவில் பெரிய புயல் தான் அடிக்கும். சில மாதங்களுக்கு முன்பு தனுஷை எவ்வளவு நார் நாராக கிழிக்க முடியுமோ கிழித்து தொங்கவிட்டிருந்தார். தற்போது அவருடைய டார்கெட் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணத்தை பற்றி பேசி இருக்கிறார் சுசித்ரா. தனுஷ் தன்னுடைய சினிமா கேரியரை ஆரம்பிக்கும்போதே ரஜினி மகளுடன் அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது என பேசப்பட்டது.

Advertisement

அதாவது, தன்னுடைய அக்காவின் நெருங்கிய தோழிதான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இதன் மூலம் தான் எங்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது என தனுஷ் பேட்டி கொடுத்திருந்தார். ஐஸ்வர்யா உடனான திருமணத்திற்கு பிறகு தனுஷின் சினிமா கேரியர் அடுத்தடுத்து உச்சத்தை அடைந்தது. தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரானார் தனுஷ்.

இந்த தம்பதிகளுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் 18 வருட திருமண உறவை முறித்துக் கொள்வதாக இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது குறித்து தற்போது பேசிய பாடகி சுசித்ரா கார்த்திக் குமாரை திருமணம் செய்வதற்கு முன்பே தனுஷ் என்னுடைய நெருங்கிய நண்பர் என கூறியிருக்கிறார். அவர் ஒரு சிறந்த நடிகர், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என சொன்ன சுசித்ரா, தனுஷை நிறைய விஷயங்களில் உரிமையாக நான் திட்டி இருக்கிறேன். காதல் கொண்டேன் ரிலீஸ் ஆன சமயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷுக்கு பொக்கே ஒன்றை அனுப்பியுள்ளார்.

தனுஷ் இதை சுசித்ராவிடம் சொன்னதாகவும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை தனக்கு ரொம்ப பிடித்திருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் தனுஷ் கூறியிருக்கிறார். அதற்கு சுசித்ரா தயவு செய்து இதையெல்லாம் நம்பாதே, வளர்ந்து வரும் ஹீரோக்களை அமுக்குவதற்காக நடைபெறும் விஷயம் இது. பாலிவுட்டில் அமிதாப்பச்சன் இப்படித்தான் செய்வார் என சொல்லி இருக்கிறார். அதற்கு தனுஷ் ரஜினி பொக்கே அனுப்புனா தானே நம்ம இத பத்தி எல்லாம் யோசிக்கணும், ஆனா அவர் பொண்ணு தான அனுப்பி இருக்காங்க. நான் அவங்கள திருமணம் செஞ்சுக்க தான் போறேன் என சுசித்ராவிடம் சொல்லியதாக இந்த பேட்டியில் அவர் சொல்லியிருக்கிறார்.

Read More : விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீர் மாயம்..!! வாஷிங் மெஷினில் சடலமாக மீட்பு..!! நடந்தது என்ன..? நெல்லையில் அதிர்ச்சி..!!

Tags :
ஐஸ்வர்யாதனுஷ்பாடகி சுசித்ரா
Advertisement
Next Article