For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’பேசிக்கிட்டு இருக்கும்போது இந்த மாதிரி பண்ணாத’..!! பேட்டியின்போது செம டென்ஷனான புஸ்ஸி ஆனந்த்..!! நடந்தது என்ன..?

Talking to the media, the general secretary of Thaveka Party, Bussi Anand became tense.
07:15 AM Oct 25, 2024 IST | Chella
’பேசிக்கிட்டு இருக்கும்போது இந்த மாதிரி பண்ணாத’     பேட்டியின்போது செம டென்ஷனான புஸ்ஸி ஆனந்த்     நடந்தது என்ன
Advertisement

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்துள்ளார். இப்போது ஹெச் வினோத் இயக்கத்தில் படத்தில் நடித்து வரும் விஜய், அவ்வப்போது தனது கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து பங்கேற்று வருகிறார். அதன்படி, தவெக மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் நடைபெறவுள்ளது. மாநாட்டிற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முடியும் தருவாயில் உள்ளன. இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டென்ஷனாகிவிட்டார்.

Advertisement

அதாவது மாநாடு பணிகள் குறித்து செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர், "மாநாடு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. நாம் அடிக்கடி சென்றால் அதுவே தொந்தரவு போல ஆகிவிடும். எல்லாம் திட்டமிட்டபடி நடந்து வருகிறது. ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொருவருக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளோம். அவை எல்லாம் நல்லபடியாக நடந்து வருகிறது" என்றார். அப்போது மாநாட்டிற்கு 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பணிகள் எப்போது முடிவடையும் என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு புஸ்ஸி ஆனந்த் பதில் சொல்லும் முன்பே கார் ஓட்டுநர் மெல்லக் காரை இயக்க தொடங்கினார். உடனே காரை நிறுத்துமாறு சைகை காட்டிய அவர், எல்லா வேலைகளுமே கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

விழா ஏற்பாடுகளைப் பார்க்க விஜய் நேரில் வருவாரா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு புஸ்ஸி ஆனந்த் பதில் அளிக்கத் தொடங்கும் போதே மீண்டும் டிரைவர் காரை எடுத்துவிட்டார். இதனால் செம டென்ஷன் ஆன புஸ்ஸி ஆனந்த், "கொஞ்சம் நிறுத்தரயா.. பேசிட்டு இருக்கும் போதே வண்டி எடுக்குற" என்று டிரைவரிடம் கடிந்து கொண்டார். சில நொடிகள் டிரைவரை முறைத்த அவர், செய்தியாளர்களிடம், "பணிகள் எல்லாம் சிறப்பாக நடந்து வருகிறது. காரில் உட்கார்ந்து கொண்டு இதையெல்லாம் பேசும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன்" என்று தெரிவித்தார்.

தவெக மாநாடு நடக்கும் இடத்தில் காமராசர், பெரியார், அம்பேத்கர் ஆகியோர் கட்அவுட் உடன் விஜய் கட்அவுட்டும் இடம் பெற்றுள்ளது. வேறு எந்த தலைவரின் கட் அவுட்கள் இதில் இடம்பெறுமா என்ற கேள்விக்கு, இப்போது வரை இந்த தலைவர்களின் கட் அவுட் மட்டுமே வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துச் சென்றார்.

Read More : வாரத்தில் 2 முறை இந்த மீன் சாப்பிட்டால் மாரடைப்பு வராது..!! ஆய்வு முடிவில் வெளிவந்த தகவல்..!!

Tags :
Advertisement