இந்துகளின் ராஜியமாக மாறிவரும் பாகிஸ்தான்!. முஸ்லிம் எண்ணிக்கை 96.35 சதவீதமாக சரிவு!. கணக்கெடுப்பில் தகவல்!
Pakistan: பாகிஸ்தானில் இந்துக்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவருவதாகவும், முஸ்லிம் எண்ணிக்கை 96.35 சதவீதமாக சரிந்துள்ளதாகவும் 7வது மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் 7வது மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அந்த பட்டியல் நேற்று வெளியானது. அதில் 2023 கணக்குப்படி பாகிஸ்தானில் 24 கோடி மக்கள் தொகை உள்ளது தெரிய வந்துள்ளது. 2017ல் நடந்த கணக்கெடுப்பில் 20 கோடி பேர் இருந்தனர். தற்போது நடந்த கணக்கெடுப்பில் பாகிஸ்தானில் இந்துக்கள் எண்ணிக்கை 38 லட்சமாக உயர்ந்துள்ளது. 2017ம் ஆண்டு கணக்கெடுப்பில் 35 லட்சம் இந்துக்கள் இருந்தனர். தற்போது கூடுதலாக 3 லட்சம் இந்துக்கள் உள்ளனர்.
பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களில் இந்துக்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அதே சமயம் முஸ்லீம்களின் எண்ணிக்கை 2017ல் 96.47 சதவீதமாக இருந்தது. தற்போது 96.35 சதவீதமாக சற்று சரிந்துள்ளது. இந்துக்களை போல் அங்கு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. 2017ல் 26 லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். தற்போது 33 லட்சமாக உயர்ந்துள்ளது. அகமதிக்கள் 1,62,684 பேரும் சீக்கியர்கள் 15,998 பேரும், பார்சிக்கள் 2,348 பேரும் உள்ளனர்.
Readmore: ஷாக்!. பன்றிக்காய்ச்சலால் மேலும் 2 பேர் பலி!. கேரளாவை அலறவிடும் வைரஸ்!