தினமும் 4 நிமிடங்கள் இதை செய்தால்.. பெண்களுக்கு மாரடைப்பு ஆபாயம் பாதியாக குறையும்.. புதிய ஆய்வு
தினமும் 4 நிமிடங்கள் ரன்னிங் போன்ற அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் பாதியாக குறையும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் ஒரு பகுதியாக, அன்றாட வாழ்வில் 5 நிமிடங்களுக்கும் குறைவான நேர உழைப்பு இதய ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தினமும் சில நிமிடங்களுக்கு உடற்பயிற்சியில் ஈடுபட்டாலே அது, உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வு 81,052 நடுத்தர வயதுடையவர்களின் தரவைப் பயன்படுத்தியது. அவர்கள் 7 நாட்களுக்கு ஒரு செயல்பாட்டு டிராக்கரை அணிந்திருந்தனர். அவர்களில், 22,368 பேர் வழக்கமான உடற்பயிற்சி செய்யவில்லை அல்லது வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.
மறுபுறம், தினசரி சராசரியாக 3-4 நிமிடங்கள் தீவிரமான உடற்பயிற்சிகளை செய்தனர். இதில் உடற்பயிற்சி செய்த பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 45% குறைவாக இருந்தது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் பேசிய போது “ மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முயற்சிக்கும் போது எந்த அளவு உடற்பயிற்சி செய்தாலும் அது நன்மை பயக்கும்.
உடற்பயிற்சி செய்வதும், இதயத் துடிப்பை தினமும் ஒரு சில நிமிடங்களுக்கு உயர்த்துவதும் இதய ஆரோக்கியத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தப் பெரிய ஆய்வு சான்றாகும்” என்று தெரிவித்துள்ளனர்.
தினமும் ஒரு சில நிமிட தீவிர உடற்பயிற்சி செய்தால் கூட அது, நடுத்தர வயதுப் பெண்களுக்கு ஒட்டுமொத்த இதய நோய்களின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று இந்த ஆய்வும் மேலும் சுட்டிக்காட்டுகிறது..
Read More : மூட்டுவலி மட்டுமல்ல.. பல நோய்களை தடுக்கும் மக்கானா..! ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்..?