For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள் - வீட்டில் இந்த 7 நாய்களை வளர்த்தால் ஆபத்து..!!

07:13 AM May 07, 2024 IST | Baskar
சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்   வீட்டில் இந்த 7 நாய்களை வளர்த்தால் ஆபத்து
Advertisement

சென்னையில் சிறுமியை நாய்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வீடுகளில் நாம் தவிர்க்க வேண்டிய நாய் இனங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Advertisement

சென்னையில் சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்ததில் படுகாயம் அடைந்த நிலையில் சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நாய்கள் மீதான அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. ஆனால், விஷயம் நாய்களில் இல்லை. அதை வளர்ப்போரிடம் தான் இருக்கிறது. உரிய முறையில் நாயை வளர்க்கவில்லை என்றால் இப்படி தான் ஆக்ரோஷமாக மாறும். மேலும், சில குறிப்பிட்ட நாய் வகைகளை வாங்காமல் இருப்பதே நல்லது என்று கூறப்படுகிறது.

1)பிட்புல்: இந்த லிஸ்டில் முதலில் இருப்பது பிட்புல் நாய்கள் தான். கடந்த காலங்களிலும் பிட்புல் நாய்கள் சிலரைக் கொன்றுள்ளதாக நாம் தொடர்ச்சியாகச் செய்திகளில் பார்த்து இருப்போம். பிட்புல் இன நாய்கள் முதலில் வலிமையான காளைகளுடன் சண்டை செய்ய உருவாக்கப்பட்ட இனம். இதனால் பிட்புல் நாய்களுக்குப் பெரிய மற்றும் வலுவான தாடைகள் இருக்கும். இதனால் ஒரு கடி கடித்தாலே அது மிக மோமசான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, வகை நாயைத் தவிர்ப்பது ரொம்ப நல்லது.

2)அமெரிக்கன் புல்டாக்: அமெரிக்கன் புல்டாக் வகை நாய்கள் சற்று பயந்தால் அல்லது திடுக்கிட்டால் அல்லது அச்சுறுத்தப்பட்டால் ரொம்பவே ஆபத்தான ஒன்றாக மாறிவிடும். இந்த வகை நாய்களுக்கு கூர்மையான பற்கள் இருக்கும் நிலையில், அருகே மற்ற விலங்குகள் தொடங்கி மனிதர்கள் வரை யார் வந்தாலும் மொத்தமாக காலி செய்துவிடும்.

3)கங்கல்: கங்கல் இன நாய்கள் உலகில் ஆபத்தான நாய் இனங்களில் ஒன்று. அதன் பெரிய சைஸ், வலிமை மற்றும் பாதுகாப்பு உள்ளுணர்வு காரணமாக அவை அச்சுறுத்தலாக மாறலாம். கங்கல் வகை நாய்கள் 50 முதல் 66 கிலோ வரை வளரும்.. இதன் பெரிய சைஸ் மற்றும் வலிமையால் அவற்றைக் கையாள்வது ரொம்ப கடினம். எனவே, அது தாக்க ஆரம்பித்துவிட்டால் பேரழிவு நிச்சயம் என்று கூறப்படுகிறது.

4)மாஸ்டிஃப்கள்: மாஸ்டிஃப்கள் என்பது மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த இனமாகும். இந்த வகை நாய்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தர வேண்டும். இல்லையென்றால் அவை பேரழிவை ஏற்படுத்தும். மேலும், புதிய நபர்களைப் பார்க்கும் போதும் அல்லது புதிய இடங்களுக்குச் செல்லும் போதும் அவை எச்சரிக்கையாக இருக்கும். எனவே, அப்போதும் இவை மிகவும் ஆபத்தானதாக மாறலாம். இப்படிப் பல சூழல்களில் அவை ஆக்ரோஷமாக மாற வாய்ப்பு இருப்பதால், இந்த நாய்களையும் தவிர்ப்பது நல்லது.

5) கனே கார்ஸோ: அதேபோல கனே கார்ஸோ இன நாய்களையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும். இவை இயல்பாக ஆக்ரோஷமான வகை நாய் இல்லை. ஆனால், முறையாக வளர்க்கவில்லை என்றால் இதை போல ஒரு ஆபத்தான நாயைப் பார்க்க முடியாது. இதற்குப் பாதுகாப்பு உள்ளுணர்வு அதிகம் என்பதால் லேசாகச் சீண்டினாலும் தாக்கிவிடும். இதன் சைஸ் மற்றும் வலுவான தசைநார் காரணமாக இதன் கடி சக்தி சுமார் 700 PSI ஆக இருக்கிறது. இந்த வேகத்தில் கடிதத்தால் ஆளே காலியாகவும் வாய்ப்பு இருக்கிறது.

6) chows chows: இந்த நாய்களை பார்க்க பெரிய டெடி பியர் பொம்பை போல இருந்தாலும் இவை ஸ்வீட்டான இனம் இல்லை. இவை வீட்டை பாதுகாக்க மட்டுமே சரியாக இருக்கும். ஓனரை தவிர யார் கிட்ட போனாலும் தாக்கவே முற்படும். ஆக்ரோஷம் அதிகம் இருக்கும் என்பதால் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் வளர்க்க வேண்டாம் என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

7)ராட்வைலர்: சென்னையில் சிறுமியை கடித்தது இந்த ராட்வைலர் இன நாய்களே காரணம். இதன் பெரிய வலிமையான தசைநார்கள், வலிமையான தாடைகள் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இவை தோலைத் தாண்டி எலும்புகளைக் கூட உடைக்கும் அளவுக்கு வலிமையானவை. மேலும், நரம்புகளிலும் கடுமையான காயங்களை ஏற்படுத்தும். இவை தவிர பிட்புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர், ஃபிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினா, போர்போயல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், டோர்ன்ஜாக்கார்கா, ஜப்பானிய தோசா மற்றும் அகிதா, டெரியர்கள், ரோடீசியன் ரிட்ஜ்பேக் கனாரியோ, அக்பாஷ், உள்ளிட்ட நாய் வகைகளையும் தவிர்ப்பது நல்லது என்று அரசே எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More: NewsClick UAPA வழக்கு: அப்ரூவர் அமித் சக்ரவர்த்தியை விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

Tags :
Advertisement