முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மழைக்காலத்தில் வீட்டில் துர்நாற்றம் வீசுகிறதா? தூய்மையாக வைத்திருக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க...

Does your house smell bad during monsoons? Follow these tips to keep clean..
04:03 PM Nov 20, 2024 IST | Mari Thangam
Advertisement

நாம் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ சுகாதாரமான வசிப்பிடம் அவசியம். சுகாதாரமான வசிப்பிடம் என்பது வீட்டை சுற்றி மட்டுமின்றி உட்புற சுகாதாரமும் தான். கொளுத்தும் வெயில் காலத்தில் கூட வீட்டை சுத்தமாக வைத்திருக்க முடியும். ஆனால் மழைக்காலத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மிக கடினமான காரியம். துணிகளை காய வைப்பதில் தொடங்கி பூச்சிகள் வீட்டில் நுழையாமல் இருக்க தடுப்பு ஏற்படுத்துவது வரை மழைக்காலம் எப்போதும் முடியும் என இல்லத்தரசிகளுக்கு படாத பாடு பட வேண்டி இருக்கும். உங்களுடைய சிரமங்களை போக்குவதற்காகவே இந்த பதிவு.

Advertisement

குப்பை சேராமல் பார்த்து கொள்ள வேண்டும் : முதலில் உங்கள் வீடு எங்கும் மாசு அல்லது குப்பைச் சேர்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.. அது மிகவும் முக்கியம். குப்பைத் தொட்டிகள் அனைத்தும் முறையான முறையில் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள். குப்பை எடுத்துச் செல்லும் முறையில் ஒவ்வொரு நாளும் அதை நீக்குவது நல்லது.

தூய்மையான அலமாரி : மழைக்காலத்தில் துணிகளை எளிதில் காய்ந்து விடாது. சிலர் மழை பெய்ய ஆரம்பித்தவுடன் வீட்டிற்குள் துணிகளை எடுத்து வந்து மின் விசிறிக்கு கீழ் போட்டு காய வைக்கலாம் என நினைப்பார்கள். இப்படி செய்தால் வீட்டிற்குள் சோப்பு வாசனை அடிக்கும். அதே போல் காயாத துணிகளை அலமாரியில் அடுக்கி வைத்தால் துர்நாற்றமே வீசும். முடிந்தவரை துணிகளை வெயிலில் காய வைத்து அதன் பிறகு அவற்றை அலமாரியில் அடுக்குங்கள்.

காற்றோட்டமான வீடு : வீட்டின் உள்ளே ஈரப்பதம் மிகுந்தோ அல்லது வெப்பநிலை அதிகம் இருந்தாலோ துர்நாற்றம் வீசக்கூடும்.. அதனால் எப்போதும் உங்கள் வீட்டில் பரவலாக காற்றோட்டம் இருந்தால், துர்நாற்றம் குறையவும், நீர் ஊட்டமுள்ள இடங்களை சுத்தமாக வைத்திருக்கவும் உதவியாக இருகும்..

வாசனை பொருள் : உங்கள் வீட்டின் உள்ளேயும் வெளியிலும் வாசனைக் கம்பிகளை பயன்படுத்துங்கள். மல்லிகை, அல்லது எலுமிச்சை போன்ற நுகர்த்திய வாசனைகள் உள்ள திரவியங்கள் இந்தப் பிரச்சனையை குறைக்க உதவும். அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் கெட்ட வாசனைகள் விரைவில் நீக்கப்பட்டு நல்ல வாசனைகள் வீட்டிற்குள் வரும்..

வீட்டில் துர்நாற்றம் மற்றும் மாசுபாடு ஏற்படக்கூடிய பகுதிகளில் நெருப்புக்கட்டிகளை பயன்படுத்தலாம். அதில் சாம்பிராணி அல்லது பூண்டின் தோல்களை போட்டு வைத்தால் வீடு முழுக்க நல்ல வாசனை நிறைந்திருக்கும்.. இதன் மூலம் மாசுப்பாட்டைப் தவிர்க்க முடியும்..

காலணி வைக்கும் இடம் : உங்கள் வீட்டில் செருப்புகளை வைக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வாரத்தில் ஒரு முறை இவற்றைப் சுத்தம் செய்வது நல்லது.. அவற்றின் மேல் கூடுதலாக மூடியிருப்பதன் மூலம் வாசனைகள் குறைக்கலாம்.

எழுமிச்சை : குளியலறை முதல் சமையலறை வரை எதையும் சுத்தம் செய்ய எலுமிச்சை பயன்படுத்தலாம். அவற்றை சுத்தம் செய்ய தண்ணீாில் எலுமிச்சை பழத்தின் தோலை அரைத்தோ அல்லது அதன் சாறை பிழிந்தோ விட்டு, தரையைச் சுத்தம் செய்யலாம். இது துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கும், சுத்தமாக வைத்திருப்பதற்கும் உதவும்.

எலுமிச்சை பயன்படுத்தி துர்நாற்றத்தை போக்கலாம்.. பாத்திரங்கள் தொடங்கி, வீட்டின் மூலை முடுக்குகள், தரையைத் துடைப்பது, சுவர்கள் மற்றும் கதவுகளை சுத்தம் செய்வது, துணிகளில் வரும் துர்நாற்றம் என எல்லா வகையான க்ளீனர்களாகவும் இந்த எலுமிச்சை பழத்தைப் பயன்படுத்த முடியும்.

சாறு பிழிந்து விட்டு கீழே தூக்கி எறியும் எலுமிச்சை தோல்களைத் சேகரித்து வைத்து, ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் விட்டு அதில் எலுமிச்சை தோல்களைச் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பின் இது ஆறியதும் அதே நீரை விட்டு அரைத்து வடிகட்டி, அதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அறை முழுவதும் ஸ்பிரே செய்து விட துர்நாற்றம் நீங்கி, அறை முழுவதும் நல்ல நறுமணம் வீசும். ரூம் ஸ்பிரேக்களே தேவைப்படாது. இந்த வழிகளைப் பின்பற்றி, உங்கள் வீட்டில் துர்நாற்றம் வராமல் எளிதாக கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

Read more ; ஆன்மீக வழிகாட்டுதலை வழங்க  “AI இயேசு”.. தேவாலையத்தின் புதிய அறிமுகம்..!! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. 

Tags :
monsoonstips to keep clean
Advertisement
Next Article