முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்கள் உடலில் மருக்கள் இருக்கா? அப்போ கட்டாயம் இதை படியுங்கள்..

does-wart-resembles-any-health-issues
07:56 AM Nov 09, 2024 IST | Saranya
Advertisement

நமது உடலில் நடக்கும் சின்ன மாற்றங்களை கூட நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும். இல்லையென்றால், அது பிற்காலத்தில் பெரிய பிரச்சனையில் முடிந்து விடும். ஆம், உதாரணமாக ஒருவருக்கு இரண்டு புருவங்களுக்கு மத்தியில் பரு வந்தால் நம் உடலில் உள்ள கல்லீரலில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஆனால் நம்மில் பலர் அதை கண்டுக்கொள்வதே இல்லை. மேலும் சிலர், முகத்தில் எதை பூசி பருவை மறைய செய்யலாம் என்று நினைப்பது உண்டு. அதேபோல தான் மருக்களும். நமது உடலில், திடீரென மருக்கள் தோன்றினால் எதிர்காலத்தில் புற்றுநோய் உண்டாகுமா? இதைப்பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

Advertisement

தோலில் இருந்து தொங்கும் சிறிய வளர்ச்சியை தான் அக்ரோகார்டன்ஸ் அல்லது கட்னியஸ் பாப்பிலோமாக்கள் என்று கூறுவது உண்டு. தோலின் மடிப்புகள் ஏற்படும் இடங்களான கழுத்து, அக்குள், தொப்புள் மற்றும் கண் இமைகள் போன்ற பகுதிகளில் தான் இந்த பாப்பிலோமாக்கள் அதிகம் காணப்படும். பொதுவாக இந்த மருக்கள் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் வரும். அதே சமயம் குடும்பத்தில் யாருக்காவது இந்த மருக்கள் இருந்தால் அடுத்த சந்ததியினருக்கும் இந்த மருக்கள் வர வாய்ப்புகள் அதிகம். உடல் எடை அதிகரித்தாலும், மருக்கள் தோன்றும்.

இந்த மருக்களால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதனால், இது புற்றுநோய் கட்டியாக இருக்கமோ என யோசிக்க வேண்டாம். ஒரு வேலை உங்கள் மார்பகத்தில் ஏதேனும் புதிய வளர்ச்சி அல்லது மாற்றங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். திடீரென அல்லது அடிக்கடி இரத்தப்போக்கு, வலி, மார்பகம் வளர்ந்து அளவு அதிகரித்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். மருக்கள் வராமல் இருக்கவும், புதிதாக வருவதை தடுக்கவும் நீங்கள், இன்சுலின் எதிர்ப்பைக் குறைத்து, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும். இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். உடற்பயிற்சி செய்வது கட்டாயம்.

மருக்கள் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினால் அவற்றை அகற்ற வழிகள் உள்ளன. இதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். அல்லது நீங்கள் வீட்டிலேயே சரி செய்ய விரும்பினால், ஒரு துண்டு இஞ்சியில் இருந்து சாறு எடுத்து, அதில் சுண்ணாம்பு சிறிதளவு சேர்க்க வேண்டும். பின்னர் இந்த கலவையில், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இப்போது இந்த கலவையை மரு இருக்கும் இடத்தில் இரவு மற்றும் பகலில் ஒரு வாரத்திற்கு தடவி வந்தால் மரு நீங்கி விடும்.

Read more: இளம்பெண்ணின் “அந்த பகுதியை” நடுரோட்டில் வைத்து பிடித்த 10 வயது சிறுவன்; வெளியான அதிர்ச்சி வீடியோ..

Tags :
cancerCarehealthlemonWarts
Advertisement
Next Article