For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முகம் பளப்பளப்பாக மாறனுமா? - அப்போ வெறும் வயிற்றில் இதை மட்டும் செய்ங்க…!

Does the face become radiant? - Then do this only on an empty stomach...!
05:30 AM May 27, 2024 IST | Baskar
முகம் பளப்பளப்பாக மாறனுமா    அப்போ வெறும் வயிற்றில் இதை மட்டும் செய்ங்க…
Advertisement

நம் உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, நாம் அதற்கு வேண்டிய உணவுகளை எடுக்கும் பொழுது உடனடியாக தீர்வு கிடைக்கும். தோல் பளப்பளப்பாக மாற என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

Advertisement

சருமத்தில் மந்திரம் செய்யும் நெய்: பொதுவாக நெய்-யை நாம் உணவில் வடிவில் எடுத்துக்கொள்வோம். சிலர் விருப்பமாக சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிடுவார்கள். மேலும், நெய் கலந்த இனிப்புகளை சிலர் அதிகளவில் சாப்பிடுவார்கள். இப்படி ஏதோ ஒரு வகையில் நாம் நெய்யை உட்கொள்கிறோம். ஆனால், நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிடுவது அவ்வளவு நல்லதாம், அதுவும் நிறைய பயன்களை கொடுக்கிறதாம். அப்படி நெய் என்னென்ன பயன்களை கொடுக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

காலையில் எழுந்தவுடன் சுத்தமான பசு நெய்யை, நான்கு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அதனை நீங்கள் பல் தேய்த்த பின்னரோ அல்லது பல் தேய்த்ததிற்கு முன்னரோ எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை நல்லெண்ணெய் கொப்பளிப்பு செய்யும் நபராக இருந்தால், அதனை செய்து முடித்த பின்னர் இதனை எடுத்துக்கொள்ளுங்கள். நெய்யை குடித்த உடன் இரண்டு டம்ளர் வெந்நீரை எடுத்துக்கொள்ளுங்கள்.

அதாவது, உங்களுக்கு கண்ணில் பிரச்னை இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், அதிகாலை எழுந்தவுடன் பல் தேய்த்து விட்டு, ஒரு கேரட் ஜூஸை குடித்தால், அந்த கேரட் ஜூஸில் இருக்கக்கூடிய மொத்த சத்தும் உங்கள் உடலுக்கு சேரும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கேரட் ஜூஸை எடுத்த பின்னர் நீங்கள் நிச்சயமாக வாக்கிங் செல்ல வேண்டும். கேரட் ஜூஸை எடுத்துக் கொண்டு சும்மா உட்கார்ந்தால் அந்த பலன் கிடைக்காது. தண்ணீரில் சீரகத்தையும், சியா விதைகளையும் போட்டு குடிப்பது உங்களது தோலை இன்னும் பளபளப்பாக மாற்றும்.

அதேபோல மாதுளம் பழம் ஜூஸில் சர்க்கரையும், பாலும் சேர்க்காமல் எடுத்துக் கொள்வதும் உங்களது தோலை பளபளப்பாக மாற்றும். அதேபோல ட்ரை ஃப்ரூட்ஸ்-க்களை ஜூஸ் ஆக எடுத்துக் கொள்ளும் பொழுதும், நமது தோல் பளபளப்பாக மாறும். உடலில் நன்றாக வேர்வை வரும் பொழுதும், உங்களது தோல் பளபளப்பாக மாறும் அதேபோல கற்றாழை ஜூஸை எடுத்துக் கொள்வதும் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.

இதற்கெல்லாம் உடனே பலன் கிடைத்து விடும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இப்படி உணவு செயல்முறையை கிட்டத்தட்ட நீங்கள் ஒரு வருடம் தொடர்ந்து செய்ய வேண்டும் அப்போதுதான் நல்ல பலன் கிடைக்கும்.

Read More: ரோல்ஸ் ராய்ஸ் கார்களை குப்பை வண்டியாக பயன்படுத்திய மகாராஜா!… ஆடிப்போன ஆங்கிலேயர்கள்!… யார் இந்த ஜெய் சிங் பிரபாகர்!

Tags :
Advertisement