காகம் அடிக்கடி உங்கள் வீட்டின் அருகில் கத்துகிறதா…! நல்லதா, கெட்டதா..!
நம் பெரியோர்கள் கூறும் ஒவ்வொன்றுக்கும் ஒரு உள் அர்த்தம் இருக்கும். பொதுவாகவேல் விலங்குகள் மற்றும் பறவைகள் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி கொண்டவை ஆகும். அதன்படி காகம் வீட்டிற்கு வந்தால், சுப நிகழ்வு வீட்டில் நடக்க போகிறது என கூறுவார்கள். பொதுவாக காகம் வீட்டிற்குள் வந்தால் நல்ல சகுனத்திற்கான அறிகுறியாக இருக்கலாம் இல்லை, கெட்ட சகுனத்திற்கான அறிகுறியாக கூட இருக்கலாம், அது காகம் இருக்கும் திசையை பொறுத்தே அமைகிறது. வாஸ்துப்படி, காகம் எந்த திசையில் இருந்தால் என்ன பலன் என்று தெரிந்துக்கொள்வோம்.
சுப காரியத்திற்கோ அல்லது வேலை காரணாமாக செல்வதற்கு முன் வீட்டில் இருந்து மேற்கு நோக்கி காகங்கள் பறந்தால், நீங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் உங்கள் வீட்டு மொட்டை மாடியிலேயோ அல்லது வீட்டிற்கு முன்னோ, காகங்கள் ஒன்று கூடி கூச்சலிட்டாள் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமாம். மேலும் காகம் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி காலை வேளையில் உங்கள் வீட்டு முன் பறந்தால், உங்கள் வீட்டிற்கு நெருங்கியவர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. நாம் பயணம் மேற்கொள்ளும்போது ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவு கொடுப்பதை கண்டால், அந்த பயணம் சிறப்பாக அமையும்.
உங்கள் வீட்டின் தெற்கு பக்கத்தில் காகம் அமர்ந்தால், அது அபாயகரமான அறிகுறியாகும். காகம் வந்து வீட்டில் உணவேதும் சாப்பிட்டால் அது உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறப் போகிறது என்பதை உணர்த்துகிறது என்று அர்த்தமாம். மேலும் காகம் கூடு கட்டும் குச்சி போன்ற பொருட்களை உங்கள் வீட்டில் போட்டுவிட்டு போனால், அந்த வீட்டில் லட்சுமி அருள் நிறைந்த பெண் குழந்தை பிறப்பதற்கான அறிகுறியாகுமாம்.