முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கத்தரிக்காய் இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்டதா..? இந்த நோய்களுக்கு இதுதான் அருமருந்து..!!

Even during the rainy season, you can cook and eat eggplant soup to keep your body warm at night.
05:40 AM Dec 18, 2024 IST | Chella
Advertisement

கத்தரிக்காய் ஒரு மூலிகை என்பது பலருக்கு தெரியாது. ஆஸ்துமா, ஈரல் நோய் போன்ற தீவிரமான நோய்களுக்கு இலக்கானவர்களுக்கு வலிமை தரக்கூடியது. இதனை வற்றல்போல் செய்து நல்லெண்ணெயில் பொறித்து சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான வெப்பசக்தி கிடைக்கும். தாது பலவீனமாகி, இல்லற வாழ்வில் உடல்சோர்வை போக்கும்.

Advertisement

கத்தரிப்பழத்தை ஊசியினால் குத்தி நல்லெண்ணெயில் வதக்கி மிளகுத்தூள், உப்பு தூவி சாப்பிட்டால், பல் நோய்கள், அஜீரணம் நீங்கும். வாய்வுக் கோளாறு குறையும். பித்தம் போகும். மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடுகளுக்கு வரும் வயிற்று வலி, வயிற்றுப்புழுக்கள், வயிறு உப்புசம் ஆகியவற்றுக்குக் கத்தரிக்காயைத் தணலில் சுட்டுச் சிறிது பெருங்காயம் கூட்டி மாடுகளுக்குக் கட்டினால், அந்நோய்கள் விலகும்.

தோல் சம்பந்தப்பட்ட நோய் உடையவர்கள் மட்டும் கத்தரிக்காயைச் சேர்க்கக்கூடாது. தோல் நோய்க் காரணங்களை இது ஊக்குவிக்கும். மூர்த்தி சிறியதாயினும், கீர்த்தி பெரியது என்னும் பழமொழிக்குச் சரியான எடுத்துக்காட்டு கத்தரிக்காய். நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2 உள்ளன.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. இதை பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் இதுவும் ஒன்று.

முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்த வேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து சாப்பிடலாம்.

கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு செய்து, புண்கள் ஆற அதிக நாள் ஆகும். மற்றவர்கள் மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெறலம். கத்தரிக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகளும் விரைந்து சிதைந்து சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும்.

Read More : BEL நிறுவனத்தில் வேலை..!! மாத சம்பளம் ரூ.55,000..!! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா..?

Tags :
கத்தரிக்காய்கத்தரிக்காய் குழம்புமருத்துவ குணங்கள்
Advertisement
Next Article