முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தொடர்ந்து கண்ணாடி அணிவதால் தழும்புகள் ஏற்படுகிறதா..? அதை எளிமையாக நீக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

Wearing glasses is a must for many of us, but most people don't like wearing them.
04:20 PM Nov 28, 2024 IST | Chella
Advertisement

கண்ணாடி அணிவது நம்மில் பலருக்கு கட்டாயமாக உள்ளது. ஆனால், கண்ணாடி அணிவதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. ஏனென்றால், கண்ணாடியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் மூக்கில் அசிங்கமாக ஏற்படும் தழும்பு தான் காரணம். அதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது நிரந்தரமாக இருக்கும். கண்ணாடி அணிவதால் மூக்கில் ஏற்படும் தழும்பை எளிமையாக நீக்குவதற்கான சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

உருளைக்கிழங்கு : சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை அகற்றும் பண்பு உருளைக்கிழங்கில் காணப்படுகிறது. இந்த கிழங்கினை மசித்து, தழும்புகள் மீது தேய்த்து மசாஜ் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் : சரும தளர்வுகளை தடுக்கும் வெள்ளிரிக்காயினை மசித்து, பேட்ஸ் போல் அரைத்து தழும்புகளின் மீது பயன்படுத்தி வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

கற்றாழை : இந்த கற்றாழை ஜெல்லினை, தழும்புகள் உள்ள மூக்கின் மீது தேய்த்து மசாஜ் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

ரோஸ் வாட்டர் : ரோஸ் வாட்டரினை, கண் கண்ணாடி தழும்புகளின் மீதி தேய்த்து மசாஜ் செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.

தேன் : 1 ஸ்பூன் தேனுடன் 1 ஸ்பூன் பால் சேர்த்து கலந்து, கண் கண்ணாடி தழும்புகளின் மீது தடவி 15 நிமிடங்களுக்கு உலர விடவும். பின் குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு தோல் பொடி : ஆரஞ்சு பழ தோலினை நன்கு உலர வைத்து பின் பொடியாக அரைத்துக்கொள்ளவும். பின் சிறிதளவு பாலுடன் சேர்த்து பேஸ்ட் செய்து தழும்புகள் மீது பயன்படுத்த நல்ல மாற்றம் தெரியும்.

எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாற்றை சருமத்திற்கு பயன்படுத்த, சருமம் பொலிவுறும். அந்த வகையில், எலுமிச்சை சாற்றினை சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து தழும்புகள் மீது பயன்படுத்தி வரலாம்.

தக்காளி : சருமத்தின் இறந்த செல்களை அகற்றும் குணம் தக்காளியில் காணப்படுகிறது. அந்த வகையில், இந்த பழத்தை கொண்டு தழும்புகளின் மீது மசாஜ் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

Read More : இணையத்தில் லீக்கான கேரள நடிகையின் ஆபாச வீடியோ..!! பதிலடி கொடுத்த திவ்ய பிரபா..!!

Tags :
ஆரஞ்சுஇயற்கைஉருளைகண்ணாடிதழும்புதேன்ரோஸ் வாட்டர்வெள்ளரி
Advertisement
Next Article