டீ, காபியில் நாட்டு சர்க்கரை சேர்த்தா சுகர் வராதா?? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..
தற்போதெல்லாம், பலர் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டியை சேர்க்கிறார்கள். வெள்ளைச் சர்க்கரை உடலுக்கு தீங்கு, ரத்த சர்க்கரை அளவை கூட்டி விடும் என்ற பயத்தில் அதிக விலை கொடுத்து நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டியை வாங்குகிறார்கள். மேலும், நாட்டு சர்க்கரை டீ வாங்கி பருகினால் தான் சர்க்கரை ஏறாது என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் உண்மையிலேயே நாட்டு சர்க்கரை, அல்லது கருப்பட்டி நமது உடலுக்கு நல்லதா என்று நீங்கள் யோசித்தது உண்டா.. இது உண்மை கிடையாது. எந்த ரூபத்தில் இனிப்பு சுவையை எடுத்தாலும் உங்கள் ரத்த சர்க்கரை அளவு கூடாத்தான் செய்யும்.
ஆம், வெள்ளை சர்க்கரையை விட நாட்டுச் சர்க்கரையில் இனிப்பு சற்று சுவை குறைவாக தான் இருக்கும். இதனால் பலர் ஒரு ஸ்பூன் வெள்ளை சர்க்கரை பயன்படுத்த வேண்டிய இடத்தில் 2 அல்லது 3 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்துவார்கள். இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. மாறாக, இதெல்லாம் மிகவும் ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். ஆம், எந்த வகை சர்க்கரையாக இருந்தாலும், அளவிற்கு அதிகமாக எடுக்ககூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.. இதனால் இனிப்பு சேர்க்காமல் டீ அல்லது காபியை எடுத்துக்கொள்வது நல்லது. இல்லையென்றால், இனிப்பை மிகவும் கம்மியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
பொதுவாக, A1c அளவுகளை, மூன்று மாதங்களில் 0.5 முதல் 1 கிராம் அளவு குறைக்கின்றன என்று ஆய்வு செய்யப்பட்டு ஒரு சில மாத்திரைகள் விற்பனை செய்யபடுகிறது. ஆனால், நாம் அன்றாட வாழ்வில் செய்யும் ஒரு சில மாற்றங்கள், அதே 1 கிராம் A1c ஐ குறைத்து விடும். அந்த வகையில், என்ன மாற்றங்களை நாம் அன்றாட வாழ்வில் மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.. முதலில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான மாற்றம் என்றால், டீ அல்லது காப்பி குடிக்கும் பழக்கத்தை குறைப்பது தான். ஏனென்றால், பாலில் உள்ள லேக்டோஸ், நமது ஜீரண மண்டலத்தால் க்ளூகோஸ் மற்றும் கேலக்டோஸாக உடைக்கப்படும். அப்போது அந்த க்ளூகோஸ் ரத்தத்தில் கலந்து, நமது கணையம் இன்சுலினை வெளியிடும். இதனால் முடிந்த வரை டீ அல்லது காபி குடிப்பதை தவிர்த்து விடுங்கள். நீங்கள் செய்யும் இந்த மாற்றமே உங்களுக்கு நல்ல பலனை தரும்.
Read more: இனி சப்பாத்தி சுடும் போது ஒரு ஸ்பூன் நெய் தடவுங்க… கேன்சரை கூட தடுக்கலாமாம்..