இந்த 3 பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் உடனே தூக்கி போடுங்கள்.! மருத்துவர்கள் எச்சரிக்கை.!
இன்றைய இயந்திர உலகில் ஒவ்வொருவரும் வேலை குடும்பம் வாழ்க்கை மற்றும் தேவைகள் என்று பம்பரமாக சுழன்று கொண்டு இருக்கிறோம். நமது ஆரோக்கியத்தை பற்றி சிந்திப்பதற்கு அதிகமான நேரம் கிடைப்பதில்லை. நமது அன்றாட தேவைகளுக்காக கடைகளில் கிடைக்கும் சில பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றால் நமது ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இவற்றில் மிக முக்கியமான பொருளாக அவர்கள் குறிப்பிடுவது நாம் பயன்படுத்தும் வாசனை பவுடர்கள். இது அநேகமானவர்களின் வீட்டில் வாசனைக்காகவும் முகத்தை புத்துணர்ச்சியாக காட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது டால்க் என்ற வேதிப்பொருளில் இருந்து தயாரிக்கப்படுகிறது இதனால்தான் டால்கம் பவுடர் என அழைக்கப்படுகிறது. இந்த டால்க் என்பது மெக்னீசியம் மற்றும் சிலிக்கான் கலந்த கலவையாகும். இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் புற்றுநோய் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மருத்துவர்களால் அறிவுறுத்தப்படும் இரண்டாவது ஆபத்தான பொருளாக இருப்பது பாத்திரங்களை சுத்தப்படுத்துவதற்கு நாம் பயன்படுத்தும் டிஷ் வாஷ் லிக்விட் ஆகும். இவை அனைத்தும் சல்பேட் என்ற வேதிப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இவற்றை பயன்படுத்தி நாம் பாத்திரங்களை சுத்தம் செய்யும்போது அதில் சல்பேட் படிந்து விடுவதாக நிபுணர்கள் வைத்துள்ளனர். இந்த பாத்திரங்களில் நாம் உணவு சமைக்கும்போது நம் உணவோடு சேர்ந்து அந்த வேதிப்பொருளும் கலந்து உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன.
நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஆபத்தான பொருட்களில் மூன்றாவது இடத்தில் இருப்பது துணி துவைக்க பயன்படுத்தும் டிடர்ஜென்ட் பவுடர்கள். இவற்றை பயன்படுத்தி நமது ஆடைகளை தூய்மைப்படுத்துகிறோம் இந்த ஆடைகளை நாம் அணியும் போது சில நேரங்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது. இதற்கு காரணம் இந்த பவுடர்கள் தயாரிக்க பயன்படும் வேதிப்பொருள்கள் ஆகும். பெரும்பாலான டிடர்ஜென்ட் பவுடர்கள் சல்பேட் ப்ளீச்சஸ் மற்றும் டை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இவற்றால்தான் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது. எனவே இது போன்ற பொருட்களை தவிர்க்கும் படி அறிவுரை கூறியிருக்கின்றனர்.