உஷார்.. இந்தியாவில் சீன பூண்டு விற்பனை அதிகரிப்பு! புற்றுநோய் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை..!!
பூண்டு இந்திய சந்தையில் முக்கிய உணவு பொருளாக உள்ளது. உணவு மட்டுமின்றி மருத்துவ குணங்களும் சிறந்து விளங்குகிறது. இதனால் நமது நாட்டில் அனைவரது வீட்டிலும் பூண்டு நிச்சயமாக இருக்கும். இந்த நிலையில் சீனா தயார் செய்து ஏற்றுமதி செய்யும் போலி பூண்டுகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உலகளவில் பூண்டினை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா விளங்குகிறது. லாப வெறியில் பூண்டு மகசூலில் பல அபாயகரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியது. பூண்டு போலவே இருக்கும் பூண்டு அல்லாத விளைபொருட்களை கலந்து விற்க ஆரம்பித்தது. பூண்டின் நிறத்துக்காக அவற்றை குளோரின் உள்ளிட்ட கடுமையான வேதிப்பொருட்களால் ப்ளீச் செய்தது.
சீனாவிலிருந்து பூண்டு இறக்குமதி செய்யும் நாடுகள் மேற்கொண்ட பரிசோதனையில், சீனப் பூண்டு அதற்கான இயற்கை குணநலன் ஏதும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த போலி பூண்டினை உட்கொள்வதால் உடல் நல அபாயங்கள் அதிகரிக்கும் என்றும் எச்சரித்தார்கள். இதனால் இந்தியாவில் சீன பூண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் சீன பூண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நுகர்வோர் உஷாராக சீனப் பூண்டினை நேரடியாக தவிர்த்தபோதும், பூண்டு மசாலா, பூண்டு விழுது பெயரிலும், உடைத்த பூண்டு விற்பனையிலும் நுகர்வோர் சரிபார்க்க முடியாத வகையில் அவர்களை மறைமுகமாக சீன ஆபத்து சூழ்ந்து வருகிறது. . இவற்றுக்கு அப்பால் சீனத்துப் பூண்டின் ஆக்கிரமிப்பால், இந்தியாவின் பூண்டு விவசாயிகள் நட்டமடைந்து வருவதும் தனியாக நடக்கிறது.
இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுகையில், சீன பூண்டு மற்ற பூண்டுகளை விட மிகவும் பெரியதாக இருக்கும். பூண்டு பற்கள் விரல்கள் போல் அடர்த்தியாக இருக்கும். இந்த பூண்டு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இருப்பினும், இந்த பூண்டு மற்ற பூண்டுகளைப் போல கடுமையான வாசனையைக் கொண்டிருக்காது, லேசான துர்நாற்றத்துடன் இருக்கலாம். மேலும் இந்த பூண்டை வெள்ளையாக்க ப்ளீச் செய்யப்படுகிறது. இதனால் இந்த பூண்டை பயன்படுத்தினால் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கிறார்.