இதய பாதிப்பு இருப்பவர்கள் இந்த பயிற்சிகளை செய்தால் உருக்கே ஆபத்து..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!
நமது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும், இதய நலனை மேம்படுத்தவும், மன ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் சீரான உடர்பயிற்சி முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வார்கள். அதேசமயத்தில், தீவிர உடற்பயிற்சி மேற்கொள்வதால் உண்டாகும் பிரச்சனைகளையும், அதனால் நம் உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். நம் உடலுக்கு இவ்வுளவுதான் முடியும் என்ற வரம்புகள் இருக்கும். அதையும் மீறி, ஓய்வில்லாமல் உடற்பயிற்சி செய்தால், மாரடைப்பு வரும் ஆபத்து அதிகமுள்ளது.
மாவுச் சத்து நிறைந்த உணவினை உண்பது, உடலுழைப்பு இல்லாத பணி போன்றவையால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து அவை இதயநோய்க்கு வழிவகுக்கிறது. பொதுவாக 40 வயதுக்கு மேல் எக்கோ, டிரெட் மில் போன்ற பரிசோதனைகள் மூலம் இதய ஆரோக்கியம் குறித்து அறிந்திருப்பது நலம். இதயநோய் இருப்பது கண்டறியப்பட்டால் எந்த பயிற்சிகளை பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
கரோனரி இதய நோய் (CHD) போன்ற இதய பிரச்சனைகள் உங்களுக்கு இருப்பது கண்டறியப்பட்டால் சில உடற்பயிற்சிகள் தீங்கு விளைவிக்கும். அதில் இடைவெளியுடன் செய்யும் அதி தீவிரப் பயிற்சி. இதனை ஹை-இன்டென்சிட்டி இன்டிரவல் பயிற்சி (HIIT) என்பார்கள். இதய நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய பயிற்சிகளில் ஒன்று இது. இந்த HIIT உடற்பயிற்சி ஆரோக்கியமான நபர்களுக்கு பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அவை இதயத்தை கூடுதலாக உழைக்கத் தூண்டும், உங்களுக்கு இதயப் பிரச்சனை இருந்தால் ஆபத்தானதாக முடியலாம். மார்பு வலி அல்லது தலை சுற்றல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.
ஓடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் கலோரிகளை எரிக்க ஒரு சிறந்த வழி. இருப்பினும் இதய நோயாளிகளுக்கு ஏற்றதில்லை இது. நீண்ட நேரம் ஓடுவது உங்கள் இதயத்தை வேகமாகச் சுருங்கச் செய்து, அதன் அதிகபட்ச திறனைக் கடந்தும் புஷ் செய்யும். நீங்கள் ஏற்கனவே இதய பிரச்னையில் இருந்தால், அவர்களுக்கு காயங்கள் ஏற்படலாம். மாரடைப்பு, பைபாஸ் அறுவை சிகிச்சை அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற இதய பிரச்சினைகள் உள்ளவர்கள் உடற்பயிற்சி திட்டத்தைத் தொடங்குவதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும் என்பது பொதுவான அறிவுறுத்தலாக உள்ளது.