For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காலுக்கு பதில் சிறுவனின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்..!! பெற்றோர்கள் அதிர்ச்சி..!! நடந்தது என்ன..?

An incident in Maharashtra where a boy admitted for a leg injury was accidentally operated on his genitals has created a stir in the area.
04:34 PM Jun 29, 2024 IST | Chella
காலுக்கு பதில் சிறுவனின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்     பெற்றோர்கள் அதிர்ச்சி     நடந்தது என்ன
Advertisement

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ஷாஹாப்பூரில் 9 வயது சிறுவன், கடந்த மாதம் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இந்நிலையில், காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு, மருத்துவர் குழு தவறுதலாக சிறுவனின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்னர், தவறினை உணர்ந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக சிறுவனின் காலில் சிகிச்சை மேற்கொண்டனர்.

Advertisement

மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து கூறுகையில், ”சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டதைத் தவிர, சிறுவனுக்கு ஃபிமோசிஸ் பிரச்சனையும் இருந்தது. அதாவது, பிறப்புறுப்பின் தோல் இறுக்கமாக இருந்தது. ஆகையால் சிறுவனுக்கு இரண்டு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. மேலும், ஃபிமோசிஸ் சிகிச்சை குறித்து பெற்றோருக்குத் தெரிவிக்காமல், மருத்துவர்கள் மறந்திருக்கலாம்" என்று கூறுகின்றனர்.

இருப்பினும், மருத்துவர்கள் அளித்த விளக்கத்தை பெற்றோர்கள் ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டனர். மருத்துவமனையின் கவனக்குறைவினால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் இதுவரை எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும், இருப்பினும் விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Read More : மக்களே அலட்சியம் வேண்டாம்..!! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை பாருங்க..!!

Tags :
Advertisement