கிரில் உணவுகளை சாப்பிடுவதால் இத்தனை ஆபத்தா? - மருத்துவர்கள் சொல்வது என்ன?
அடுப்பில் வைத்து சூடப்பட்ட கிரில் போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உணவகங்களுக்குச் சென்று சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவு வகைகளை ரசித்து உண்பெதென்பது தற்போது ஃபேஷனாகி வருகிறது. இறைச்சி அல்லது கடல் உணவு வகைகளை லேசான வேக்காட்டில் வேக வைத்து எடுத்துக் கொண்டு அதில் மசாலா தடவி குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுவார்கள். பின்னர் வாடிக்கையாளர்கள் வந்து கேட்கும் போது கிரில் அடுப்பில் வைத்து மீண்டும் சுட்டு பரிமாறுவார்கள்.
ஆனால் இப்படி சமைக்கப்பட்ட இறைச்சி உள்ளிட்ட உணவு வகைகள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடிய உணவு முறைகள் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் . அதாவது சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடு படுத்தும் போது அதில் heterocyclic amines (HCAs) எனப்படும் கார்சினோஜன்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்வதால் அதிகளவு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அதாவது, பார்பிகியூ முறையில் தயார் செய்யும் போது உருவாகும் இரண்டு இரசாயனங்கள் HCA-க்கள் மற்றும் பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (PAHs) ஆகியவை DNA-வை மாற்றியமைக்கும் தன்மை கொண்டவை. எவ்வளவு நேரம் இறைச்சியை கிரில் செய்யப்படுகிறதோ, அவ்வளவு அதிக HCAக்கள் மற்றும் PAH-க்கள் உருவாகின்றன. இதனால் மரபணு நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது. மேலும், இது உடலில் வயதான செயல்முறையை துரிதப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், “HCA-க்கள் மற்றும் PAH-க்கள் உடலில் உள்ள குறிப்பிட்ட நொதிகளால் வளர்சிதைமாற்றம் செய்யப்பட்ட பின்னரே டிஎன்ஏவை சேதப்படுத்தும் திறன் கொண்டவை. இந்த நொதிகளின் செயல்பாடு ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடலாம் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. எனவே புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து ஒவ்வொரு உடலுக்கும் வேறுபடலாம்.
இதேபோல், அதிக நேரம் சமைத்த உணவை மீண்டும் சமைத்து உண்பதால் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ளாத பெண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இந்த சுடப்பட்ட இறைச்சிகளில் உள்ள அதிக நிறைவுற்ற கொழுப்பு, புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Read more | டி20 உலகக் கோப்பை வெற்றி அணிவகுப்பு.. கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!!