Doctors | ’மருத்துவர்களே இனி தவறை மட்டும் செய்யாதீங்க’..!! எச்சரிக்கும் தமிழ்நாடு அரசு..!!
பொதுவாக உடல் நிலை சரியில்லை என்று மருத்துவரிம் சென்றால், அவர்கள் நம்மைப் பரிசோதனை செய்துவிட்டு மருந்துகளை எழுதித் தருவார்கள். ஆனால், பெரும்பாலான நேரம் அவர்கள் எழுதித் தரும் மருந்துகளைப் பார்த்தாலே நமக்குத் தலைச் சுற்றிவிடும். அந்தளவுக்கு மருத்துவரின் கையெழுத்து இருக்கும். மருத்துவர்கள் ஏன் இதுபோல எழுதித் தருகிறார்கள் என்பது நமக்கும் தெரியாது. அவர்கள் என்ன எழுதித் தருகிறார்கள் என்பது புரியாமல், நாமும் மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம்.
மருந்தகங்களில் இருக்கும் நபர்களே கூட என்ன எழுதித் தருகிறார்கள் என்று புரியாமல் குழம்பும் நிகழ்வுகளும் கூட நடந்துள்ளன. உடலுக்கு ரொம்பவே சீரிஸயாக முடியாமல் இருக்கும் போது இதுபோல புரியாத வார்த்தைகளில் இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். இத்தனையும் மருந்து சீட்டுக்களில் தெளிவாக எழுதிக் கொடுக்க வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ரூல்ஸ் இருக்கிறது.
அதாவது தங்களுக்கு என்ன மருந்துகள் வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் தான் மருத்துவர்கள் மருந்துகளை எழுதித் தர வேண்டும். ஆனால், பெரும்பாலான மருத்துவர்கள் இதை கடைபிடிப்பதில்லை. மெடிக்கல்கள் ஊழியர்கள்ளுக்கு மட்டும் தான் மருத்துவர்கள் எழுதித் தருவது புரிகிறது. சில சமயம் அவர்களும் கூட புரிவதில்லை. இது தொடர்பாக மருத்துவத்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளில் மருந்துகளை எழுதித் தரும் போது ஆங்கிலத்தில் CAPTAL எழுத்துகளில் தான் எழுதித் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
நோயாளிகளுக்குப் புரியும் வகையில் தான் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ள நிலையில், இப்போது தமிழ்நாடு அரசும் இதே உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள் என அனைத்து மருத்துவர்களும் மருந்து சீட்டுகளில் CAPTAL லெட்டரில் தான் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
English Summary : Write The Name Of Drugs In Capital Letters Or In A Legible Manner
Read More : சூப்பரோ சூப்பர்..!! இனி ஆண்களுக்கு இணையாக பெண்களும் சம்பளம் வாங்கலாம்..!! Kerala அரசு அதிரடி..!!