முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தாய்மார்களே.! குழந்தைகளுக்கு பால் பாட்டிலில் பால் கொடுக்குறீங்களா.? மருத்துவரின் அறிவுரை என்ன தெரியுமா.!?

02:44 PM Jan 25, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாதமாகும் வரை தாய்ப்பாலை தவிர வேறு எதுவும் தரக்கூடாது. பிறந்த குழந்தைகளின் உடல் உள்உறுப்புகள் ஆறு மாதம் வரை முழுமையாக வளர்ச்சி அடையாது. அப்படியிருக்க தாய்ப்பாலை தவிர வேறு ஏதாவது தரும்போது குழந்தைகளுக்கு ஜீரணம் ஆகாமல் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

Advertisement

இதனாலையே குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர வேறு எதுவும் தரக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் தாய்ப்பாலின் பற்றாக்குறை காரணமாக குழந்தைகளுக்கு என்று தனியாக கடைகளில் விற்கப்படும் பால் மாவு வாங்கி பாலாக கலந்து பீடிங் பாட்டிலில்  கொடுத்து வருகின்றனர். இந்த தாய்ப்பாலில் இருக்கும் சத்துக்கள் பால்மாவிலும் ஓரளவு இருக்கும் என்றாலும் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் இதை குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்கக் கூடாது.

அவ்வாறு பால் பாட்டிலில் கொடுக்கும்போது ஒரு சில முறைகளை பின்பற்ற வேண்டும். அதாவது பாட்டிலை பயன்படுத்துவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக கொதிக்க வைத்த சுடுதண்ணியில் 5 நிமிடங்கள் வரை போட்டு நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு செய்வது குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கும்.

மேலும் பால் பாட்டிலில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது குழந்தையை மடியில் தூக்கி வைத்து தலையை சற்று தூக்கியவாறு பிடித்துக் கொண்டு பால் பாட்டிலை சாய்த்து கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதால் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது இருமல், மூச்சு திணறல் ஏற்படாமல் இருக்கும். குடித்து முடித்த பின்னர் பால் பாட்டிலை அப்படியே வைக்கக் கூடாது. உடனடியாக கழுவி உலர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வது குழந்தைகளின் உடல் நலனை பாதுகாக்கும்.

Tags :
Feeding bottlenewborn babyparents
Advertisement
Next Article