"தயவு செய்து, இனி டீ போதும் போது இந்த தவறை மட்டும் செஞ்சுராதீங்க", டாக்டர் சிவராமன் அட்வைஸ்..
உணவு இல்லாமல் கூட வாழ்ந்து விடுவேன் ஆனால் டீ, காபி இல்லாமல் என்னால் வாழவே முடியாது என்று சொல்லி, டீ அல்லது காபியையே உணவு போல் மூன்று வேலை குடிக்கும் பலர் உள்ளனர். குறிப்பாக காலையில் எழுந்த உடன் டீ அல்லது காபி குடிக்காவிட்டால் அவர்களால் எந்த வேலையையும் செய்யவே முடியாது. அந்த அளவிற்கு டீ, காபி பிரியர்கள் பலர் உள்ளனர். ஆனால் இப்படி தினமும் காபி மற்றும் டீ குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
ஆனால் நீங்கள் காலை நேரத்தில் சுறுசுறுப்பாக உணர வேண்டும் என்றால் அதற்க்கு மருத்துவர் ஒரு சில பானங்களை பரிந்துரைத்துள்ளார். அதில் அவர் கூறும் போது, "ஒரு நாள் நெல்லிக்காய் சாறு எடுத்து, அதில் தேன் கலந்து குடிக்கலாம். குறிப்பாக, மூலம் நோய் பாதிப்பு இருப்பவர்கள் நெல்லிக்காய் பொடியை ஒரு ஸ்பூன் போட்டு, அதுடன் ஒரு கிளாஸ் இளஞ்சூடான தண்ணீர் ஊற்றி தேன் கலந்து குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்.
மேலும், இது போல், ஆவாரை தேநீர் குடிக்கலாம், வெந்நீரில் எலுமிச்சை, இஞ்சி சாறு கலந்து குடிக்கலாம். இல்லையென்றால், வெறும் தேயிலையை கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் போட்டு, அதனை சிறிது நேரம் முடி வைத்து குடிக்கலாம். ஆனால் இதில் கட்டாயம் பால் சேர்க்க கூடாது. ஏனென்றால், பால் சேர்ப்பதால் தேநீரின் பெரும்பாலான சத்துகள் நம் உடலுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே, பால் சேர்க்காமல் பிளாக் டீ, கிரீன் டீ ஆகியவற்றை குடிக்கலாம் என மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்துள்ளார்.
Read more: உடைந்த எலும்புகளை கூட ஒட்ட வைக்கும் அற்புத மருந்து; கட்டாயம் இந்த கீரையை வாரம் 1 முறை சாப்பிடுங்க..