நோய் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க, இந்த உணவுகளை தான் காலையில் சாப்பிட வேண்டும்.. டாக்டர் சிவராமன் அட்வைஸ்..
ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமான ஒன்று என்றால், அது இரும்புச்சத்து தான். இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை, சாபிட்டால் தான் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒரு வேலை உங்கள் உடம்பில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால், ரத்தசோகை ஏற்படும். ரத்தசோகை வந்துவிட்டால், சோர்வு மற்றும் பலவீனம் அதிகம் இருக்கும், உங்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. ஒரு சிலர் நான் நிறைய சாப்பிடுகிறேன் ஆனால் ரத்தம் இல்லை என்று சொல்வார்கள். அதிக அளவு உணவு சாப்பிடுவதால் எந்த பலனும் இல்லை. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது தான் முக்கியம்.
அந்த வகையில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன, என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து விடுபட, கம்பு, சோளம், வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவை காலை உணவாக சாப்பிடவேண்டும். அரிசி, கோதுமையை விட, இந்த உணவுகளில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை அதிகம். திணை அரிசியில் நீங்கள் பொங்கல் மற்றும் உப்மா செய்து சாப்பிடலாம்.
கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை செய்து சாப்பிடலாம். மூட்டு வலி பிரச்சனைக்கு இது ஒரு நல்ல தீர்வு. உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய கம்பில், நீங்கள் கூழ், தோசை, குழிப்பணியாரம் செய்து சாப்பிடலாம். தினமும் ஒரே இட்லி, தோசை சாப்பிடாமல், இது போன்ற உணவுகளை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
Read more: நறுக்கி வைத்த வெங்காயத்தை மறுநாள் சமையலுக்கு பயன்படுத்துறீங்களா..? – மருத்துவர்கள் எச்சரிக்கை