For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்க குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்குதா?? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. டாக்டர் சிவராமன் அட்வைஸ்..

doctor sivaraman advice for frequent cold in kids
04:27 AM Dec 17, 2024 IST | Saranya
உங்க குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்குதா   அப்போ இதை மட்டும் செய்யுங்க   டாக்டர் சிவராமன் அட்வைஸ்
Advertisement

தற்போது உள்ள குளிர்காலத்தில்,பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் சுலபமாக சளி பிடித்து விடும். அப்படி பிடித்த சளி ஒரு வாரத்திற்கு மேல் நம்மை பாடாய் படுத்தி விடும். இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு சோர்ந்து போய் விடுவார்கள். ஒரு சில குழந்தைகளுக்கு ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகளால் அடிக்கடி சளி பிடிப்பது உண்டு. ஆனால் தங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற பிரச்சனை உள்ளதே பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. உங்கள் குழந்தைகளுக்கு அடக்கடி சளி பிடித்தால் கட்டாயம் ஒரு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது அவசியம். அந்த வகையில், ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் நமது உணவு பழக்கத்தின் மூலம் சரி செய்து விடலாம்.

Advertisement

இது குறித்து மருத்துவர் சிவராமன் கூறும்போது: உங்கள் குழந்தைக்கு அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க முதலில், இனிப்பு வகைகள் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தைகளுக்கு குறிப்பாக நெஞ்சில் கபம் இருக்கும் குழந்தைகளுக்கு சாக்லேட், இனிப்பு பண்டங்கள் கொடுக்கவே கூடாது. இதை தவிர துவர்ப்பு, காரம், உவர்ப்பு சுவை உள்ள உணவுகளை குழந்தைகளுக்கு சாப்பிட வைக்க வேண்டும். முக்கியமான பைபர் நையகரம் என்று சொல்லக் கூடிய கரு மிளகு கட்டாயம் சேர்க்க வேண்டும். காரத்திற்கு மிளகாய் அல்லது மிளகாய் பொடி பயன்படுத்தும் இடத்தில் மிளகு சேர்த்து கொடுக்கலாம். குழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 5-6 மிளகு சாப்பிட வேண்டும்.

மிளகில் உள்ள பைபரின் பைரடிரின் என்ற 2 ஆஸ்கலாட்டுகள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும், அது நெஞ்சில் உள்ள கபத்தை விலக்கி வெளி ஏற்றக் கூடிய தன்மை உள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, வீசிங், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் மிளகு பயன்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement