For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொலை செய்ய முயற்சி..! ரஜினி மற்றும் அவரது மனைவியை கைது செய்யுங்கள்..! பெண் டாக்டர் பகீர் குற்றச்சாட்டு...

Doctor Rajalakshmi Kandaswamy has been continuously sharing shocking allegations against Superstar Rajinikanth and his wife Latha Rajinikanth and also on BJP member Khushbu Sundar.
07:08 PM Oct 04, 2024 IST | Mari Thangam
கொலை செய்ய முயற்சி    ரஜினி மற்றும் அவரது மனைவியை கைது செய்யுங்கள்    பெண் டாக்டர் பகீர் குற்றச்சாட்டு
Advertisement

ரஜினிகாந்த் மற்றும் அவர் மனைவி லதா மீது டாக்டர் ஒருவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அளித்த புகார் தற்போது வைரல் ஆகிவருகிறது. டாக்டர் ராஜலட்சுமி கந்தசாமி என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவர் மனைவி எனக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர். என்னை கொல்லவும் முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மேலும், இதுதொடர்பாக ரஜினிகாந்த் மீது காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், லதா ரஜினிகாந்த் தன்னிடம் வேலை செய்பவர்களை துன்புறுத்துவதாகவும், வன்முறையுடன் நடந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ரஜினி மற்றும் குஷ்பு சுந்தர் தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், நோயாளிகளை தொந்தரவு செய்து தன்னை நிம்மதியாக வேலை செய்ய அனுமதிக்கவில்லை என்றும் புகார் அளித்துள்ளார். அவரது வீடியோக்களை பார்த்த சிலர், பிரபலங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார். அவர் ஒரு மருத்துவர் கூட இல்லை என்று நெட்டிசங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

Read more ; புற்று நோயை உண்டாக்கும் நான்ஸ்டிக் பாத்திரங்கள்..!! – நிபுணர்கள் எச்சரிக்கை

Tags :
Advertisement