இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க.. டாக்டர் பால் அட்வைஸ்..
சர்க்கரை அளவை குறைப்பதன் மூலம் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பை தடுக்க முடியும் என டாக்டர் பால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"இந்தியாவில் 11 பேரில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. கேரளாவில் 5ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. முதல் இடத்திற்கு தமிழகமும், கர்நாடாவும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். சர்க்கரை வியாதியில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று பரம்பரை ரீதியாக வருவது.
இதில் குறிப்பிட்ட நபருக்கு இன்சுலின் சுரக்காமல் இருக்கும். இதனால் அவர்களுக்கு இன்சுலின் கொடுக்கப்படுகிறது. இரண்டாம் வகையில் குறிப்பிட்ட நபருக்கு இன்சுலின் உடலிலேயே சுரக்கும் ஆனால் சரியான உணவு முறை இல்லாததால் இன்சுலின் சரிவர வேலை செய்யாது. இவர்களுக்கு உணவு கட்டுப்பாடு மிக அவசியம். நம் உடலின் உள்ளுறுப்புகள் ஒழுங்காக செயல்பட செல்கள் ஒழுங்காக செயல்பட வேண்டும்.
இதற்கு ஆற்றலை கொடுப்பது நம் உண்ணும் உணவுகள் தான். நம் உண்ணும் உணவில் இருந்து கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு என செல்கள் பிரிக்கிறது. இதில் அளவுக்கு அதிகமான கார்போஹைட்ரேட் இருப்பின் அதனை வயிற்று பகுதில் கொழுப்பாக சேர்த்து வைக்கிறது. இதனால் இன்சுலின் போதுமான அளவு சுருக்காமலும், வேலை செய்யாமலும் இருக்கிறது. இதனால் உடலில் கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவை பாதித்து கடைசியாக இதயம் பாதிக்கிறது.
எனவே நாம் உண்ணும் உணவில் அளவுக்கு அதிகமாக கார்போஹைட்ரேட், சுகர் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குளுக்கோஸ் அளவை குறைக்க விரதம் கூட எடுக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
Read more: சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை குறைபாட்டுடன் பிறக்குமா..? மருத்துவர் அளித்த விளக்கம்..