மழைக்காலத்தில் உங்கள் வீட்டில் பாதுகாப்பா இருக்கணுமா..? தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டில் சமீபத்திய மழையினால் மின்சாரம் தாக்கி சில உயிரிழப்புகள் ஏற்பட்டதால், பாதுகாப்புக்காக எர்த் லீகேஜ் சர்க்யூட் பிரேக்கர்களை (ELCBs) நிறுவுமாறு மின்சார வாரியம் மக்களை வலியுறுத்தியுள்ளது.
ஆர்சிடி கருவி தொடர்பாக தமிழக மக்களுக்கு மின்சார வாரியம் முக்கியமான எச்சரிக்கை மற்றும் ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளது. வீடுகளில் சிறிய பாதுகாப்பு கருவி ஒன்றை பொருத்த வேண்டும் என்று மின்சார வாரியம் Tangedco சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. RCD உயிரை காக்கும். கட்டிடத்தின் உள் மின் இணைப்புகளில் ஏற்படும், பழுதுகளில் இருந்து சிறிதளவு மின் கசிவு இருந்தாலும் RCD மின்னோட்டத்தை நிறுத்தி விடும். மழைக்காலம் வரும் முன் உங்கள் வீட்டில் மின் திறனாளரைக் கொண்டு 30mA RCD பொருத்த வேண்டுமென்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, நம் வீடுகளில் RCD பொருத்துவது, நமது அன்புக்குரியவர்களின் உயிர்களைக் காப்பாற்றுகிறது. இந்த சிறிய அக்கறை மின்சார வீடுகளில் மின் விபத்துகளைத் தடுக்கும். வீடு நமது அன்பின் கூடு, அதனை RCD-யுடன் பாதுகாப்போம் என்று மின்சார வாரியம் Tangedco சார்பாக கோரிக்கை விடுத்துள்ளது.
ஆர்சிடி என்றால் என்ன..?
ஆர்சிடி என்பது ஒரு பாதுகாப்பு சாதனம் ஆகும். இது மின்சார ஓட்டத்தில் ஏதேனும் தவறு இருந்தால் தானாகவே மின்சாரத்தை அணைக்கும் திறன் கொண்டது. RCDகள் சாதாரண உருகிகள் மற்றும் சர்க்யூட் பிரேக்கர்களை விட அதிக உணர்திறன் கொண்டவை. அதாவது வீட்டில்தான் பியூஸ் இருக்கிறேதே என்று சொல்ல வேண்டாம். இது பியூஸை விட வேகமானது. அதோடு திறன் கொண்டது. மின்சார அதிர்ச்சிக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்கும். இதனால் உங்களுக்கு ஷாக் அடிப்பதை தவிர்க்க முடியும்.
ஒரு RCD மூலம் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு மின்சார ஓட்டம் தவறான நேரங்களில் தடுக்கப்பட்டு உயிர்காக்க முடியும். RCD கருவி பொதுவாக மின்சார சர்க்யூட் எனப்படும் சுற்றுடன் பாயும் மின்சாரத்தை தொடர்ந்து கண்காணிக்கும். உதாரணத்திற்கு நீங்கள் மின்சார வயரை தொடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நேரடியாக மின்சார பகுதியை தொட்ட நபரின் வழியாக, திட்டமிடப்படாத பாதையில் மின்சாரம் பாய்வதைக் கண்டறிந்தால், அது மின்சுற்றை மிக விரைவாக அணைத்துவிடும். இதனால் இறப்பு அல்லது கடுமையான காயம் ஏற்படும் அபாயத்தை ஆர்சிடி குறைக்கும்.
Read More : இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!! திடீரென அதிகரித்த வரத்து..!! சரிந்த காய்கறிகளின் விலை..!! விவரம் உள்ளே..!!