தலை முடி கருமையாக மாற வேண்டுமா.? இந்த ஆர்கானிக் ஹேர் டை யூஸ் பண்ணி பாருங்க.!
அனைவருக்குமே தங்களது தலைமுடி கருமையான நிறத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இயந்திர மயமாகிவிட்ட வாழ்க்கை முறை மற்றும் தரமற்ற உணவுகள மேலும் அவசர வாழ்க்கை முறையின் காரணமாக தலை முடியை சரியாக பராமரிக்க முடியாமல் இருப்பதால் இளம் வயதிலேயே நரை வருகிறது. சரி செய்வதற்காக ரசாயனங்கள் கலந்த ஹேர் டை பயன்படுத்துகின்றனர். இது கூந்தலின் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு உடல் நலனையும் பாதிக்கிறது.
இயற்கையான முறையில் எளிய பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்படும் இயற்கை ஹேர் டை பயன்படுத்துவதன் மூலம் கூந்தலை கருமை நிறமாக மாற்றுவதோடு அதன் ஆரோக்கியத்தையும் உடல் நலனையும் பேண முடியும். இயற்கையான முறையில் எப்படி ஹேர் டை தயாரிப்பது என்றும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பார்ப்போம்.
இந்த ஹேர் டை தயாரிப்பதற்கு ஓமவல்லி இலை, அவுரி பொடி, வெள்ளை கரிசலாங்கண்ணி பவுடர், மருதாணி இலை மற்றும் செம்பருத்தி பூ ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸி எடுத்து அதில் ஓமவல்லி இலை, அவுரி பொடி, ஆகியவற்றை ஓட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நன்றாக அரைக்கவும்.
பின்னர் ஒரு கடாய் எடுத்து அது நன்றாக சூடானதும் அரைத்து வைத்த பேஸ்டை சேர்த்து உயரமான சூட்டில் நன்றாக கிளறிக் கொள்ளவும். கனவு நன்றாக கொதித்து மசிந்து வந்ததும் அதில் சிறிதளவு கரிசலாங்கண்ணி பவுடர் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். நர்சவ்வை அனைத்து 10 முதல் 15 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும். இந்த ஹேர் டையுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் கரிசலாங்கண்ணி பவுடர் சேர்த்து முடியின் வேரில் படும்படி நன்றாக மசாஜ் செய்து கொள்ளவும். இந்த ஹேர் டை 30 நிமிடம் ஊற வைத்து அதிக ரசாயனம் கலக்கப்படாத ஷாம்பூ பயன்படுத்தி தலை முடியை கழுவ வேண்டும். இந்த செயல்முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வர முடிகள் நன்றாக கருமையாக மாறும்.