செல்வ மகள் சேமிப்புத் திட்டம்..!! புத்தாண்டுக்கு வந்தது ஜாக்பாட் அறிவிப்பு..!! மத்திய அரசு சொன்ன செம குட் நியூஸ்..!!
இந்தியாவிலேயே செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் அதிக அளவிலான கணக்குகள் துவங்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் தற்போது 2-ஆம் இடத்தை பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக தொடங்கப்பட்ட "சுகன்யா சம்ருதி யோஜனா - Sukanya Samrudhi Yojana" என்ற செல்வமகள் சேமிப்புத் திட்டம், 2015ஆம் ஆண்டு, ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் மோடியால் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, இந்தியாவில் பெண் குழந்தைகளின் திருமண செலவு மற்றும் பிற செலவுகளுக்கான மாபெரும் சேமிப்பு திட்டமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் விளங்கி வருகிறது. அதாவது, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரிலேயே செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கை ஆரம்பிக்கலாம். பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் குறைந்தபட்ச முதலீடு ரூ.250 ஆகும். ஆரம்பத்தில் இந்தத் தொகையானது 1,000 ரூபாயாக இருந்தது. ஆனால், அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக முதலீட்டு தொகை குறைக்கப்பட்டுள்ளது. ரூ.250-க்குப் பிறகு, ரூ.50-ன் மடங்குகளில் அதாவது ரூ.300, ரூ.350, ரூ.400 என்பது போல் முதலீடு செய்து வரலாம். இந்தத் திட்டம் ஆரம்பிக்கபட்டபோது ஆண்டுக்கு 9.6% வட்டி வழங்கப்பட்டது.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், 10 வயது வரை உள்ள பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்ய வேண்டும். ஆனால் இந்த திட்டம் 21 ஆண்டுகளுக்கு பிறகுதான் முதிர்ச்சியடைகிறது. 15 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும் மொத்த தொகை 3.60 லட்சம் ரூபாய். செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு தற்போது 8.1% வட்டி வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இந்த புத்தாண்டில் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி குறைக்கப்படும் என செய்தி வெளியானது. இதனால், குழந்தைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வரும் மார்ச் மாதம் வரை செல்வ மகள் திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Read More : ”இப்படி சமைத்தால் வீட்டில் சமைக்கக் கூடிய உணவுகளும் ஆபத்து தான்”..!! ஆரோக்கியமாக சமைப்பது எப்படி..?