நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழணுமா? அப்ப தினமும் காலையில் இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க..
காலையில் சீக்கிரம் எழுவது உடல் நலத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது உங்கள் நாளைத் திட்டமிடுவதற்கு உங்களுக்கு அதிக நேரத்தை வழங்குவது மட்டுமல்லாமல், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உங்களை உற்சாகப்படுத்தவும், உடலின் சர்க்காடியன் தாளத்தை சமநிலைப்படுத்தவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகிறது.
அந்த வகையில் ஆரோக்கியமாக இருக்கும் நபர்கள் தினமும் சில காலைப்பழக்கங்களை பின்பற்றுகின்றனர். இந்த பழக்கங்களை நீங்களும் பின்பற்றுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமானதாக மாற்றலாம்.
தண்ணீர் குடிப்பது : ஆரோக்கியமானவர்கள் காலை எழுந்தவுடன் தண்ணீர் குடித்து தான் தங்கள் நாளைத் தொடங்குவார்கள். இதனால் இரவு தூக்கத்திற்குப் பிறகு உடலை மீண்டும் நீரேற்றம் செய்யலாம், உங்கள் வளர்சிதை மாற்றத்தை தொடங்குவதுடன், நச்சுகளை வெளியேற்றும். காலை நீங்கள் குடிக்கும் தண்ணீர் நாள் முழுவதும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
தியானம் : நினைவாற்றல் பயிற்சி மற்றும் தியானத்துடன் உங்கள் நாளைத் தொடங்குவது நேர்மறையான தொனியை அமைக்கிறது, மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது. மேலும் கவனத்தையும் தெளிவையும் அதிகரிக்கிறது. 5-10 நிமிட நினைவாற்றல் பயிற்சி ஒரு நபரின் மன நலனில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி : யோகா அல்லது குறுகிய நடைப்பயிற்சி போன்ற சில வகையான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம், ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும். மேலும் இது, ஆற்றல் மட்டங்களை அதிகரிக்கலாம், உடற்பயிற்சி ஒரு நபரின் பசியை ஒழுங்குபடுத்தவும், அவர்களின் மனத் தெளிவை மேம்படுத்தவும் உதவும்.
நன்றி தெரிவிப்பது : ஒவ்வொரு காலையிலும் நீங்கள் நன்றியுள்ள விஷயங்களைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்குவதும் முக்கியம். இது நேர்மறையான மனநிலையை வளர்க்கவும், மகிழ்ச்சியை அதிகரிக்கவும் உதவும். உங்கள், நாளுக்கு ஒரு ஆக்கபூர்வமான அணுகுமுறையை அமைக்கவும் உதவும். நீங்கள் நன்றியுள்ள மூன்று விஷயங்களை ஒரு நாட்குறிப்பில் எழுதலாம் அல்லது உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
சமச்சீரான உணவு : சமச்சீரான காலை உணவை உட்கொள்வது ஆற்றலை அளிக்கிறது, பசியை திருப்திப்படுத்துகிறது, உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. நாள் முழுவதும் நீடித்த ஆற்றலுடன் இருக்க உங்கள் காலை உணவில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட் கலந்தடுகளின் கலவையைச் சேர்க்கவும்.
சூரிய ஒளி : ஆரோக்கியமான உடலுக்கு காலையில் இயற்கையான சூரிய ஒளி தேவை. இது சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்துகிறது, மனநிலையை மேம்படுத்துகிறது. மேலும் வைட்டமின் டி அளவை அதிகரிக்கிறது. காலையில் சில நிமிடங்கள் சூரிய ஒளி உங்கள் மீது படும் வெளியே சிறிது நேரம் செலவிடுங்கள்.
Read More : இடுப்பு வலி, முதுகு வலி, கை கால் வலி இருக்கா? அப்போ இந்த கஞ்சியை குடிங்க.. உங்களுக்கே மாற்றம் தெரியும்..