For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Ration: உங்க ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா...? நாளை நடைபெறும் சிறப்பு முகாம்...! முழு விவரம்

06:30 AM Mar 08, 2024 IST | 1newsnationuser2
ration  உங்க ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா     நாளை நடைபெறும் சிறப்பு முகாம்     முழு விவரம்
Advertisement

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர், சென்னை அவர்களின் அறிவுரைப்படி, சென்னையில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

மார்ச்-2024 மாதம் இரண்டாவது சனிக்கிழமை நாளை 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம். இக்குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கைபேசி எண் பதிவு மற்றும் கைப்பேசி எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்ற உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement